Politics
TN Assembly Live Updates | மிசாவை பற்றி பேசுவதற்கு முதலமைச்சருக்கு எந்த ஒரு தகுதியும் கிடையாது.. உதயநிதி கா...
Tamil Nadu Assembly Live Updates | தமிழ்நாடு சட்டப்பேரவை மானியக்கோரிக்கை மீதான விவாத்தின் நேரலை அப்டேட்கள் உடனுக்குடன்...

முதலமைச்சர் அறிவித்த அறிவிப்புகளில் பெண்கள் குறித்து யாரும் தவறாக பேச கூடாது அப்படி பேசினால் நடவடிக்கை எடுக்கும் என கூறி உள்ளார். அதனை ஒரு பெண் எம்எல்ஏ ஒரு பெண்ணாக நான் வரவேற்கிறேன். பெண்கள் குறித்து சமூக வலைதள பக்கத்தில் தவெக வினரும் தவறாக பேசி வருகிறார்கள். வெறும் 12 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கி கொண்டு லட்சக்கணக்கான ஊர்காவல்படையினர் இன்று காவல்துறையில் புதிய அறிவிப்புகள் வரும் என மிக பெரிய எதிர்பார்ப்புகளில் இருந்தனர். காவலர்களுக்கு ஒரு நல்ல செய்தியை முதலமைச்சர் இன்று மாலைக்குள் கொடுத்தால் நன்றாக இருக்கும் – பிரேமலதா
யாருடைய தயவிலும் கட்சியை நடத்தவில்லை. நாங்கள் திமுக உடன் எப்போதும் கூட்டணி வைக்க விரும்பவில்லை. திமுக ஒரு தீயசக்தி – எங்கள் இயக்கத்தைப் பற்றி யார் குறை சொன்னாலும் ஏற்க முடியாது – அக்ரி கிருஷ்ணமூர்த்தி
ஜெயலலிதா அவர்களை குறைத்து மதிப்பிடவில்லை. சட்டப்பேரவை குறிப்பில் அம்மையார் அம்மா என்று இல்லை. அவர்களை குறைத்து மதிப்பிடுவதாக நினைக்க வேண்டாம். மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் என்று சொல்கிறேன் – அமைச்சர் வன்னி அரசு
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் என்றுதான் சொல்கிறார்கள். அதேபோல் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என்று சொல்வது சரியல்ல. அம்மா என்று குறிப்பிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஏற்கனவே அமைச்சர் இரண்டு முறை பெயர் சொல்லி விட்டார் – எஸ்.பி.வேலுமணி
முதலமைச்சர் சொல்லியதெல்லாம் குற்றச்சாட்டுகள் தான் ஆதாரம் கிடையாது – குற்றச்சாட்டை மட்டும்தான் வைத்தார் ஆதாரம் கிடையாது. குற்றச்சாட்டு என்பது நிரூபிக்க வேண்டும். பெண்களை தவறாக பேசக்கூடாது என்று சொல்கிறார் இந்த முதலமைச்சர் அதை சொல்லக்கூடாது அவர் நடித்த படங்கள் என்ன அதற்கான காட்சிகள் என்ன ? அவர் நடிச்ச படம் என்ன அது பற்றியெல்லாம் நாங்கள் பேசினால் தாங்க முடியாது – எதிர்க்கட்சி தலைவர்.
#JUSTIN ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை வைத்தார் முதலமைச்சர் – எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி #UdhayanidhiStalin #DMK #TVK #TamilnaduAssembly #News18Tamilnadu | https://t.co/rRJCTTegh9 pic.twitter.com/D9QMIFTD94
— News18 Tamil Nadu (@News18TamilNadu) September 7, 2026
இரு தினங்களுக்கு முன்பு திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்து ஐந்தாறு மணி நேரத்தில் ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டது. முதலமைச்சர்கள் விஷ்ணு ரெட்டி அணில் ரெட்டி 3 பேர் கனிம வளத்துறைகளை கையில் வைத்திருக்கிறார்கள். எங்களுக்கு வாய்ப்பு தர இருக்கிறேன் என்று சொன்ன சபாநாயகர் இரண்டாவது நிமிடமே அதை மாற்றியது ஏன் ? வாய்ப்பு கொடுக்க முடியாது என்று சொல்கிறார் – உதயநிதி ஸ்டாலின்
அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள். முதல்வர் மீது இன்கம் டேக்ஸ் வழக்கு இருக்கிறது. முதலமைச்சர் மீது வருமான வரித்துறை வழக்கு இருக்கிறது. பொதுப்பணித்துறை அமைச்சர் மீது அமலாக்கத்துறை கேஸ் இருக்கிறது. தமிழக வெற்றி கழக காட்சிகளை ஒன்று இருக்க அமைச்சர்கள் மீது வழக்கு இருக்கிறது. இவர்களெல்லாம் கூட சேர்த்துக் கொண்டு எங்களை கேட்க இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? இங்கே அரசு குதிரை நேரத்தில் வெளிப்படையாக நடத்தி வருகிறது – உதயநிதி ஸ்டாலின்
1970 70 க்கு சென்று விட்டார் சர்க்காரியா கமிஷன் மிசா பற்றி எல்லாம் பேசுகிறார் சர்க்காரியா கமிஷன் பற்றி இவருக்கு என்ன தெரியும்? மிசா முதலமைச்சர் பேசுகிறார், கொடநாடுக்கு சென்று தன் படத்தை வெளியிடுப்பதற்காக காத்திருந்தவர் இன்று மிசாவை பற்றி பேசுகிறார். சர்க்காரியா கமிஷன் மற்றும் மிசாவை பற்றி பேசுவதற்கு எந்த ஒரு தகுதியும் கிடையாது. ED சொன்னதெல்லாம் குற்றச்சாட்டுகள் தான். சர்க்கரை கமிஷன் சொன்ன பிறகு 3 முறை க்கு வந்தது திராவிட முன்னேற்ற கழகம் – உதயநிதி ஸ்டாலின்
முதலமைச்சர் வியாழக்கிழமை முழு பதில் சொல்கிறேன் என்று ஓடி போய்விட்டார் நான் கூட ஏதோ சொல்வார் என்று நினைத்தோம் – வியாழக்கிழமை எப்படி ஓடிப்போனாரோ அது போல மனப்பாடம் பண்ணி ஒப்புவித்தல் போட்டி போல் செய்கிறார் அப்படி தான் பதிலுறை இருந்தது. முதலமைச்சர் நாங்கள் சட்டம் ஒழுங்கு சம்மந்தமாக எந்த கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவில்லை. வெறும் diversion tactics தான் செய்தார். உங்கள் மீது வழக்கு இருக்கிறது என்று சொல்கிறார் வழக்கு இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்பதுதான் நாங்கள் செய்கிறோம் – உதயநிதி ஸ்டாலின்
முதலமைச்சர் பல தவறான பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். எந்தவித குற்றச்சாட்டுக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. என்ன presure வந்தது என்று தெரியவில்லை. எங்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட வில்லை. முதலமைச்சரின் முழு பேச்சுக்களையும் கேட்டுவிட்டு நாங்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம் – உதயநிதி ஸ்டாலின்
நாங்கள் இப்போ ஆட்சியில் இல்லை – முதலமைச்சர் திமுக ஆட்சியில் நடக்கிறது என்று நினைப்பிலேயே பேசியிருக்கிறார். இந்த அரசின் மீது வெளியே வைத்த விமர்சனங்கள் தான் சட்டப்பேரவைக் குழுவில் இருந்து பேசி இருக்கிறார்கள். அதற்கு சபாநாயகர் இடம் எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டோம் – உதயநிதி ஸ்டாலின்
முதலமைச்சர் அளித்த பதிலுரைக்கு திமுகவினர் தொடர்ச்சியாக பேச அனுமதி கோரினர். நீண்ட நேரமாக அமளியில் ஈடுபட்டும், தர்ணாவில் ஈடுபட்டும் பேச அனுமதி அளிக்கப்படாததால் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவையில் தொடர்ச்சியாக பேச அனுமதி கூறியும் சபாநாயகர் அனுமதி கொடுக்காததால் திமுகவினர் சபாநாயகர் இருக்கைக்கு அருகே தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதலமைச்சர் ஒரு மணி நேரம் பதிலுரை அளித்தார். திமுகவினர் பேச அனுமதி கூறி கூச்சலிட்டு வருகின்றனர். ஆனால் சபாநாயகரோ தனித்தீர்மானம் பற்றி பேச அறிவித்து வருகிறார்.
பெண்களுக்கு எதிரான புகார்களுக்கு தாமதமாகவே FIR பதிவு செய்தனர். சென்னை உயர்நீதிமன்றம் கண்டங்களை தெரிவித்தது. அப்போது இருந்த உள்துறை செயலாளர் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க சொன்னது நீதிமன்றம். கடந்த காலத்தில் குற்றம் சாட்டப்பட்டர்கள் ஆளுங்கட்சியாக இருந்ததால் தாமதமாகவே நடவடிக்கை எடுத்தனர். ஆனால் இந்த ஆட்சியில் தவறு செய்தவர்கள் எங்கள் கட்சி நபராக இருந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் மீதே உடனடியாக வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர் – முதலமைச்சர் விஜய்
சட்டம் ஒழுங்கு பற்றி பேசும் போது உங்கள் ஆட்சியை ஒரு முறை கண்ணாடியில் பார்த்து கொள்ளுங்கள். மக்களை சீர் அழித்தது என போதாமல் இயற்கை வளங்களையும் கொள்ளை அடித்தது யார். அனைத்துக்கும் ஒரே பதில் திமுக. அனைத்து விஷயங்களில் இந்த அரசு கன்னம் கருத்தமா இருக்கிறது. இனியும் அப்படித்தான் இருப்போம் – முதலமைச்சர் விஜய்
ஒவ்வொரு உறுப்பினர்கள் கேள்வி கேட்டும் போது இடையில் வந்து தலையிடுவது அழகல்ல. கூட்டு பொறுப்பு இருந்து அமைச்சர்கள் பதில் சொல்வது மரபு தான். எல்லா உறுப்பினர்களும் அவர்கள் தொகுதி சார்ந்த பிரச்சனைகளை அவையில் பேசி வருகிறார்கள். எதிர்கட்சிகள் பேச வேண்டும் என்று தான் நாங்களும் கூறினோம். இந்த ஆட்சியில் திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்ததா கூறினார்கள். ஆனால் அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் அதிமுக காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களின் பெயர்களை மாற்றி உள்ளனர் – முதலமைச்சர் விஜய்.
அண்ணா, எம்ஜிஆர், என்டிஆர், விஜய். நான் இந்த நாற்காலிக்காகவோ, பதவிக்காகவோ வரவில்லை.. மக்களுக்கு நன்றி கடன் செய்யத்தான் வந்துள்ளேன். நான் சும்மாவே காட்டு காட்டு காட்டுவேன். நீங்க வேறு வேறு காட்டு காட்டு சொன்னிங்க அதான்- முதலமைச்சர் விஜய்
இரண்டு டிபார்ட்மெண்ட் ஃபைல் ஓபன் செய்ததுக்கே இப்படி என்றால்.. மத்த துறைகளை ஓபன் செய்தால் எப்படி இருக்கும். ஆதாரம் வேண்டும் ஆதாரவம் வேண்டும் என கேட்டார்கள். இந்த ஆதாரம் போதுமா. திமுக இருக்கும் இடத்தில் தான் தப்பு நடக்கும். தப்பு நடக்கும் இடத்தில் தான் திமுக இருக்கும் – முதலமைச்சர் விஜய்
செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குறித்தும் அமலாக்கத்துறை சொல்லி உள்ளது. திமுக எதை செய்தாலும் குடும்பத்துடன் தான் செய்வார்கள் போல. செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் டாஸ்மார்க் டென்டரில் ஈடுபட்டார் என அமலாகத்துறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. திமுக எதை செய்தாலும், குடும்பமாக சேர்ந்து தான் செய்வார்கள் போல, கரூர் Gang என்ன ஒரு சூப்பரான பெயர். அந்த Gang ன் தலைவர் யார் என நமக்கே கேள்வி எழுகிறது. செய்தும் தவறை, ஒழுங்கா, முறையாக, கரெக்டாகா செய்துள்ளனர் – முதலமைச்சர் விஜய்
செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி உள்ளார் என அமலாக்கத்துறை சொல்லி உள்ளது. What a achivement, கடந்த ஆட்சியில் டாஸ்மாக்கை கையில் வைத்திருந்த அமைச்சர் உடன் சில ஐ ஏ எஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் அதில் ஈடுபட்டனர். யார் இந்த ரதீஷ், அதற்கு பதில் சொல்வார்களா, கடவுளுக்கு தான் வெளிச்சம் – முதலமைச்சர் விஜய்
கலைஞர் மீது எனக்கு பெரிய மதிப்பு மரியாதை உண்டு. நான் அவர் எந்த குற்றச்சாட்டையும் வைக்கவில்லை, அறிக்கையில் இருப்பதை தான் சொல்கிறேன். லோனுக்கு இஎம்ஐ கட்ற மாதிரி இன்ஸ்டால்மெண்ட்ல வாங்கி இருக்காங்க. இந்த 29 லட்சம் மட்டும் இல்ல இந்த முரசொலி கட்டிடம் சொல்லி அதை கற்றதுக்காக எல்லாம் கொடுத்திருக்காங்க காசா குடுத்துருக்காங்க பொருளாக வாங்கி கொடுத்திருக்காங்க. கலைஞர் அவர் பெயரை மென்ஷன் பண்ணதாக கூறி அதற்கு தான் மன்னிப்பு கூறினேன் – முதலமைச்சர் விஜய்
மூன்று பைல் களில் ஒரு சில sample பார்கலாமா.. அமலாக்கத்துறை அனுப்பிய ஆவணத்தில், 16 கோடிக்கும் அதிகம்னு எஸ்டிமேட்டா 16 கோடிக்கு 2% தான் 40 லட்சம் ரூபாய் கமிஷனா வரும்னு கணக்கு இந்த கணக்கு விசாரணை கமிஷன் அறிக்கை தான் இருக்கு 2001ல் இதே அவை முன்னாள் முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா மேடமும் முன்னாள் அமைச்சர் திரு. பொன்னியின் அவர்களும் இதே சர்க்காரியா விசாரணை கமிஷன் அறிக்கை பற்றி பேசி இருக்கிறார்கள் அவருடைய மருமகன் பொருள்சாத்தம் பேரும் அடிப்பட்டுச்சு 50 வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஒரு விஷயத்தை 25 வருஷத்துக்கு முன்னாடி இதே சபையில் எடுத்தோம் அப்பதான் எல்லா கூத்து வெளிய வர ஆரம்பிச்சது அப்படி பாத்தா அந்த அறிக்கை வந்து பொன்விழா ஆண்டே வந்திருக்கு – முதலமைச்சர் விஜய்
எட்டு கோடி பேரின் அடையாளமாக, 8 கோடி மக்களின் சொந்தமாக இந்த அரசு இருக்கும். மக்கள்கலம் மக்கள் நலம் என்றே சொல்வோம்.. தமிழக மக்கள் நலம் ஒன்றை கருத்தில் கொள்வோம். மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசாவை கூட தொட மாட்டோம். தொட்டவர்களையும் விடமாட்டோம் என ஏற்கனவே கூறியுள்ளோம் – முதலமைச்சர் விஜய்
தனிப்பட்ட முறையில் தரம் தாழ்ந்து பேச வேண்டாம். மக்கள் எனக்கு கொடுத்துள்ள இடம் இது சாத்தியமானதற்கு காரணம் பெண்கள் தான் பெண்கள் குறித்து யாராவது அவதூறாக அசிங்கமாக பேசினால் சட்டம் தனது கடமையை செய்யும். அரசியல் காழ்ப் புணர்ச்சியில் பேசுகிறார் என நினைத்தால், அதற்கு நான் பொறுப்பாக முடியாது – முதலமைச்சர் விஜய்
ஒரு காவலர் தவறு செய்திருந்தால் அவருக்கு எந்தவித பாதுகாப்பும் வழங்கப்படுவதில்லை. தவறு செய்தவர் யாராக இருந்தாலும் சட்டம் தனது கடமையை சரிவர செய்து வருகிறது. காவல் நிலைய மரணங்களை முற்றிலும் தவிர்க்க கண்காணிப்பு, பயிற்சி, மருத்துவ பரிசோதனை, தொழில்நுட்ப கண்காணிப்பு உள்ளிட்டவை மேற்கொள்ளப்படுகிறது. 21 ஆம் நூற்றாண்டின் குற்றங்களை 20 ஆம் நூற்றாண்டின் காவல் முறைகளால் எதிர்கொள்ள முடியாது. இன்று குற்றம் தெருவில் மட்டுமல்ல, இணையத்திலும் நடைபெறுகிறது. எனவே குற்றம் நடந்த பிறகு நடவடிக்கை எடுப்பதை விட குற்றம் நடைபெறக்கூடிய சூழலை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பது நவீன காவல்துறையின் நோக்கமாக இருக்க வேண்டும் – முதலமைச்சர் விஜய்
மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே மாண்புமிகு உறுப்பினர்கள் பேசியபோது காவல் மரணங்கள் குறித்து தெரிவித்திருந்தனர் காவல் நிலையத்தில் ஓர் உயிரிழப்பு ஏற்படுவது என்பது சாதாரணமான ஒரு நிகழ்வு அல்ல அது ஒரு குடும்பத்தின் இழப்பு மட்டுமல்ல காவல்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையும் பாதிக்கும் மிக முக்கியமான பிரச்சினையாகும் எனவே காவலில் எந்த ஒரு மரணம் ஏற்பட்டாலும் அதன் காரணம் குறித்து வெளிப்படையான பாரபட்சமற்ற மற்றும் சட்டப்படி உரிய விசாரணை நடைபெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் வழிகாட்டுதல் படி காவல் மரணம் தொடர்பான தகவல்கள் உரிய காலத்திற்குள் தெரிவிக்கப்படுவதோடு தேவையான மருத்துவ உடற்கூறாய்வு மற்றும் மேஜிஸ்டரேட் விசாரணை நடவடிக்கைகளும் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது – முதலமைச்சர் விஜய்
சட்டம் ஒழுங்கு என்பது தெருவில் நடைபெறும் குற்றங்களுடன் மட்டும் முடிவதில்லை. நாம் டிஜிட்டல் உலகத்திற்குள் நுழைந்து விட்டோம் அதனால் சைபர் குற்றங்களும் நவீன சட்டம் ஒழுங்கின் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளனர். இணைய மோசடி போலி முதலீட்டு திட்டங்கள் ஓடிபி மற்றும் வங்கி மோசடிகள் போலி வேலை வாய்ப்பு சமூக ஊடக மோசடிகள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் தொழில்நுட்பத்தின் வாயிலாக நடைபெறுகின்றன. இதற்கு காரணம் தொழில் நுட்பம் மட்டுமல்ல டிஜிட்டல் கல்வி அறிவு குறைவு அவசரமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற மனநிலை சரி பார்க்காமல் முதலீடு செய்வது முதியோருக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்த போதிய அறிமுகம் இல்லாமல் போன்ற காரணிகளும் சைபர் குற்றங்களுக்கு வாய்ப்பளிக்கின்றன எனவே சைபர் குற்றங்களை தடுப்பதற்கு காவல்துறையின் தொழில்நுட்பத் திறனை மட்டும் அதிகரிப்பது போதாது. பள்ளி கல்லூரி மாணவர்கள் முதல் முதியோர் வரை அனைவருக்கும் டிஜிட்டல் பாதுகாப்பு குறித்த அடிப்படை கல்வி வழங்கப்பட வேண்டும். காவல்துறை வங்கிகள் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து செயல்படும் ஒரு வலுவான சைபர் பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் – முதல்வர் விஜய்
நமது தமிழ் மரபில் நல்லாட்சிக்கும், நீதிக்கும் மிக உயர்ந்த இடம் வழங்கப்பட்டுள்ளது. எப்படி செயல்பட வேண்டும் என்று நமது திருவள்ளுவர் கூறி உள்ளார். யாரிடமும் சார்பில்லாமல் நன்றாக ஆராய்ந்து நடுநிலையுடன் நீதி வழங்குவதே முறையான ஆட்சி என்பதை கூறியுள்ளார். அதேபோல் தந்தை பெரியார் சமூக நீதியை வலியுறுத்தினார். காமராஜர் நேர்மையான நிர்வாகத்தை வலியுறுத்தினார். பேரறிஞர் அண்ணா மக்கள் நல ஆட்சியை வலியுறுத்தினார். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஏழு எளிய மக்களின் நலனை தனது அரசின் மையமாக கொண்டிருந்தார். இந்த மிகப்பெரும் ஆளுமைகளின் சிந்தனைகளையும், ஒருங்கிணைத்து பார்க்கும்போது காவல்துறை என்பது அதிகாரத்தின் அடையாளமாக இருக்கக் கூடாது, அது மக்களின் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது – முதலமைச்சர் விஜய்.
இந்த அரசை குறை கூறும் நோக்கில் கூறியவர்களின் கருத்தை கூட மக்களின் பாதுகாப்பு குறித்த அவர்களை கவலையையும் அக்கறையும் இந்த அரசு மிகுந்த பொறுப்புணர்வுடன் எடுத்துக் கொள்கிறது. உள்நோக்கத்துடன் கூடிய கருத்தாக இருந்தாலும் கூட அதிலும் உண்மை இருக்கிறதா என பொறுப்புடன் பரிசலித்து ஏற்க வேண்டியதை ஏற்பதில் எந்த பாகுபாடும் காட்ட மாட்டோம் – முதலமைச்சர் விஜய்
காவல்துறையை பொருத்தவரை ஒரு முக்கியமான கருத்தை, இந்த அவையில் பதிவு செய்ய விரும்புகிறேன். சட்டத்தை மதித்து நடப்பவர்களுக்கு, காவல்துறை உற்ற நண்பனாகவும், சட்டத்தை, பிறரின் உரிமைகளையும் சட்டத்தையும் பிறரின் உரிமைகளையும், மீறுபவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் எதிரியாகவும் இருக்க வேண்டும். ஒரு காவலர் இந்த இரண்டு பண்புகளையும் கொண்டவராக இருக்க வேண்டும். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு காவலர்கள் எந்தவித பார பட்சமும் இடையூறும் இன்றி தங்களது பணியை நேர்மையாகவும், துணிச்சல் ஆகவும் மேற்கொள்ளக்கூடிய சூழலை உருவாக்குவதற்கு இந்த அரசு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது – முதலமைச்சர் விஜய்
முதலமைச்சராக இருந்தாலும் அமைச்சராக இருந்தாலும் அதிகாரிகளாக இருந்தாலும் எந்த அரசியல் அதிகாரத்திற்கும் காவல் துறையின் சட்டபூர்வ நடவடிக்கைகளில் தேவையற்ற தலையீடு இருக்கக்கூடாது என்பதை கடுமையாக வலியுறுத்தி உள்ளேன் குற்றவாளி யாராக இருந்தாலும் எந்த கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை வேண்டும் என்பதும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதுமே இந்த அரசின் நிலைப்பாடு – முதலமைச்சர் விஜய்
ஒவ்வொரு குடிமகனும் எவ்வளவு பாதுகாப்பாகவும் பயமில்லாமலும் வாழ்கிறார் என்பதில்தான் உண்மையான முன்னேற்றம் இருக்கிறது. புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். வளரும் பெண்களும் இளைஞர்களும் சுதந்திரமாக கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பங்கேற்பார்கள் அதனால் காவல்துறை என்பது வெறும் குற்றவாளிகளை கைது செய்யும் அமைப்பு மட்டுமல்ல ஒரு மாநிலத்தின் பொருளாதாரம் வளர்ச்சிக்கும் சமூக அமைதிக்கும் முதலீட்டு சூழலுக்கும் மக்களின் நம்பிக்கைக்கு அடித்தளமாக விளங்கும் ஒரு முக்கியமான அமைப்பு – முதலமைச்சர் விஜய்
முதலமைச்சரின் பதிலுரைக்கு பிறகு தான் தனித்தீர்மானம் என சபாநாயகர் கூறிய நிலையில், திமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று சட்டப்பேரவை கூடியது. சற்று நேரத்தில் முதலமைச்சர் பதிலுரை அளிக்கிறார்.
இன்று பேரவை கூடியதும் தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் சட்டத்திருத்த முன்வடிவை முதலமைச்சர் விஜய் தாக்கல் செய்கிறார். தொடர்ந்து காவல்துறை மானியக் கோரிக்கை மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசவுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில், காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் இன்று பதிலளித்துப் பேசுகிறார். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினைத் தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பேசினர். உதயநிதி பேசும்போது குறுக்கிட்ட முதலமைச்சர் திங்களன்று விரிவாகப் பதில் அளிப்பதாகக் கூறியிருந்தார். இதை ஒட்டு மொத்த தமிழக மக்களும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.
