Sport
முதலமைச்சர் கோப்பை போட்டிக்கு அரசு கல்லூரி சார்பில் 6,152 பேர் பதிவு
கோவை: 2026ம் ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிக்கான பதிவு நடந்து வருகிறது. இதில் கோவை அரசு கலைக் கல்லுாரியின் இரு ஷிப்ட் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் மிகுந்த ஆர்வத்துடன் முன்பதிவு செய்துள்ளனர்.
கல்லுாரியின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 5,785 மாணவர்களும், 83 மாற்றுத்திறனாளி மாணவர்களும், 257 ஆசிரியர்களும், 27 அலுவலக பணியாளர்களும் என மொத்தம் 6,152 பேர் இந்த போட்டிகளுக்காக பதிவு செய்துள்ளனர்.
இதில் 3,108 ஆண்களும் 3,044 பெண்களும் அடங்குவர். மற்ற கல்வி நிறுவனங்களை ஒப்பிடும்போது கோவை அரசு கலைக்கல்லுாரியில் அதிக மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் பதிவு செய்துள்ளனர்.