Religion
அவிநாசியில் விநாயகர் சதுர்த்தி 254 சிலைகள் பிரதிஷ்டை திட்டம்

அவிநாசி:விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, ஹிந்து முன்னணி சார்பில் அன்னையர் ஆலோசனைக் கூட்டம் அவிநாசியில் நடந்தது.
திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலய அரங்கில் நடந்த கூட்டத்துக்கு, மாநில பொதுச்செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.
தமிழர் பண்பாடும், ஹிந்து தர்மமும், சனாதனமும் ஒன்றுதான் என்பதை மையப்படுத்தி இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது.
அவிநாசியில் இந்த ஆண்டு 254 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தில் 1,008 தாய்மார்கள் விநாயகர் உருவப் படங்களை ஏந்தியும், 108 பெண்கள் திருவிளக்கு ஏந்தியும் பங்கேற்க உள்ளனர். பாரம்பரிய வீர விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன. வரும் 16ம் தேதி நடைபெறும் விசர்ஜன ஊர்வல பொதுக்கூட்டத்தில் திரைப்பட இயக்குனர் பேரரசு பங்கேற்று பேசுகிறார்.
திருப்பூர் மாவட்டம் முழுவதும் வரும் 10ம் தேதி ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து காப்புக் கட்டி விநாயகர் சதுர்த்தி விழாவை துவங்குகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.