Sport
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி முன்னேற்பாடு பணி குறித்து ஆலோசனை
கரூர்:கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் முத்துக்குமரன் தலைமை வகித்தார்.
கரூர் மாவட்டத்தில், முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கு பெறுவதற்கு இணையதளம் மூலம், 11,617 பள்ளி மாணவ, மாணவியர், 12,808 கல்லுாரி மாணவ, மாணவியர், 1,770 மாற்றுத்திறனாளிகள், 4,491 அரசு அலுவலர், 19,345 பொதுமக்கள் என மொத்தம், 50,023 பேர் பங்கேற்க உள்ளனர். இன்று முதல், 26 வரை கரூர் மாவட்ட விளையாட்டு மைதானம், கரூர் தளவாபளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரி, புலியூர் செட்டிநாடு பொறியியல் கல்லுாரி, வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பரணி பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் கரூர் மாநகராட்சி நீச்சல் குளத்தில் போட்டி நடக்கிறது.கட்டாயம் ஆதார் கார்டு நகல்இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே போட்டிகளில் கலந்துகொள்ள முடியும். போட்டியாளர்கள் போட்டி நடக்கும் இடத்திற்கு காலை, 7:00 மணிக்குள் வர வேண்டும், போட்டியாளர்கள் அனைவரும் கட்டாயமாக ஆதார் கார்டு நகல், வங்கி பாஸ் புத்தக நகல் எடுத்து வர வேண்டும். பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் படிப்புக்கான சான்றிதழ் அல்லது அடையாள அட்டை, அரசு பணியாளர்கள் அடையாள அட்டை அல்லது அலுவலக கடிதம், மாற்றுத்திறனாளிகள் தங்களது அடையாள அட்டையை போட்டி நடக்கும் இடத்திற்கு கட்டாயம் எடுத்து வர வேண்டும்.இணையதளத்தில் அறியலாம்மேலும், போட்டி நடைபெறும் இடங்கள், தேதி குறித்த விபரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின், https://tncmtrophy.sdat.in/event-schedule என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் அல்லது கரூர் மாவட்ட விளையாட்டு அலுவலரை, 74017 03493 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.