Politics
சட்டப்பேரவை கூட்டத் தொடரின் கடைசி நாளில் பெரும் பரபரப்பு.. ஆக்ஷன் எடுத்த சபாநாயகர்
சட்டசபையில் திமுகவினர் குறித்து முதலமைச்சர் விஜய் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கக்கோரி அமளியில் ஈடுபட்ட அக்கட்சி உறுப்பினர்கள், குண்டு கட்டாக வெளியேற்றப்பட்டனர்.

காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரையாற்றிய முதலமைச்சர் விஜய், திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இந்நிலையில், சட்டப்பேரவையில் பேசிய திமுக கொறடா எ.வ.வேலு, சர்க்காரியா குழு தொடர்பாகவும், நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டை ஆதாரமாக கொண்டும் முதலமைச்சர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதற்கு பதில் அளித்த சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், சர்க்காரியா குழுவின் குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இருப்பதாக கூறி சிபிஐ வழக்கு பதிவு செய்திருப்பதாக கூறினார். மேலும் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மிசாவில் கைது செய்யப்படவில்லை, பெண்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் தான் கைதானதாக குற்றம்சாட்டினார்.
இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச தொடங்கிய போது இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் முற்றும் நிலை ஏற்பட்டது. பின்னர் பேசிய முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, திருமணம் முடிந்த ஓரிரு நாட்களில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக குறிப்பிட்டார்.
இந்நிலையில், முதலமைச்சர் விஜய் பேசியதில் இருந்து எந்த பகுதியையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது என்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் திட்டவட்டமாக குறிப்பிட்டார். அதற்கான காரணத்தையும் விளக்கினார்.. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுகவினர் அவையின் மையப்பகுதிக்கு வந்து சபாநாயகர் முன்பு முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது பேசிய அவை முன்னவர் செங்கோட்டையன், சட்டப்பேரவைக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடும் திமுகவினரை அவையில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார். திமுகவினர் இருக்கைக்கு சென்று அமருமாறு சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார்.
ஆனால், திமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவையில் இருந்து அவர்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் உத்தரவிட்டார். இதனையடுத்து திமுகவினரை காவலர்கள் குண்டு கட்டாக வெளியேற்றினர். இதனால், சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜோதிகாவின் 20ம் ஆண்டு திருமண உடையில் இவ்வளவு காதல் குறியீடுகளா? வெளியான சுவாரஸ்ய தகவல்கள்!
20ம் ஆண்டு திருமண உறவை கொண்டாடும் விதமாக, சூர்யா - ஜோதிகா மீண்டும் திருமணம்!
இதில் காதலை உணர்த்தும் வகையில் ஜோதிகாவின் உடையில் பல குறியீடுகள் இருந்துள்ளன.
சுவாரஸ்யமான அந்த டீடெய்ல்ஸை இங்கே தெரிஞ்சுக்கோங்க!
