Sport
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி நாமக்கல்லில் நாளை தொடக்கம்: கலெக்டர்
நாமக்கல்; 'மாவட்டத்தில், முதல்வர் கோப்பை விளை-யாட்டு போட்டிகள், நாளை தொடங்குகிறது' என, நாமக்கல் கலெக்டர் மதுபாலன் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில், 2026-27-ம் ஆண்டிற்-கான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி பள்ளி, கல்லுாரி, பொதுப்பிரிவு, மாற்றுத்திறனா-ளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என, ஐந்து பிரிவு-களில் ஆண்கள், பெண்கள் பங்கேற்கும் வகையில், நாளை தொடங்குகிறது. இப்போட்டி கள் அனைத்தும், காலை, 7:00 மணிக்கு, மாவட்ட விளையாட்டு அரங்கம், கே.எஸ்.ஆர்., கல்லுாரி, கிளாசிக் பள்ளி, விக்டோரியா ஹால் மற்றும் ஸ்பைரோ பிரைம் பப்ளிக் பள்ளி, திருச்செங்-கோடு சாலை, நாமக்கல் ஆகிய இடங்களில் நடக்கிறது. பொதுப்பிரிவு ஆண்கள், பெண்களுக்கு, ஏழு வகையான விளையாட்டுகள், வரும், 20 முதல், 21 வரை நடக்கிறது.மாற்றுத்திறனாளிகளுக்கு (ஆண், பெண்) வயது வரம்பு இல்லை. அதில், உடல் ஊனமுற்றோர் தட-களம், இறகுபந்து, சக்கர நாற்காலி, மேசைபந்து ஆகிய போட்டிகளிலும், பார்வை திறன், செவித்-திறன், மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிக-ளுகுகு தடகள போட்டி, வரும், 21ல், நாமக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கிறது.
இணைய தளத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே விளையாட்டு போட்டியில் கலந்துகொள்ள முடியும். நேரடி பதிவு கிடையாது. போட்டிகள் நடைபெறும் இடம் மற்றும் தேதி அறிய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைய-தளம் மூலம் அறியலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.