Sport
விளையாட்டு போட்டி
சிவகங்கை:முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை கலெக்டர் ஆகாஷ் துவக்கி வைத்தார்.
விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்வர் விளையாட்டு போட்டி செப்., 9 முதல் 25 வரை நடைபெறுகிறது. இம்மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, காளையார்கோவில் உட்பட பல்வேறு பள்ளிகளில் இப்போட்டிகள் நடக்கின்றன. சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் கலெக்டர் ஆகாஷ் போட்டிகளை துவக்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணன் வரவேற்றார். தாசில்தார் ராஜலட்சுமி, ஆர்.ஐ., பிரபு, கராத்தே பயிற்சியாளர் பரமசிவம் மற்றும் பள்ளிகளின் உடற்கல்வி இயக்குனர்கள், பயிற்சியாளர்கள் பங்கேற்றனர்.