Religion
அணை நீர்பரப்பு, காவிரியில் 2,000 சிலைகள் கரைப்பு

மேட்டூர்; மேட்டூர் அணை நீர்பரப்பு, காவிரி ஆற்றில், 980 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
விநாயகர் சதுர்த்தி முடிந்து, 3ம் நாளான நேற்று, மேட்டூர் காவிரி ஆற்றில், 433, மேட்டூர் அணை கொளத்துார் சென்றாய பெருமாள் கோவில் நீர்ப-ரப்பு பகுதியில், 11, திப்பம்பட்டி நீர்பரப்பு பகு-தியில், 191, கூணான்டியூரில், 345 என, ஒரே நாளில், 980 விநாயகர் சிலைகளை பக்தர்கள் கரைத்தனர்.
கடந்த, 14ல், 475, நேற்று முன்தினம், 385, நேற்று, 980 என, 1,840 சிலைகள், மேட்டூர் காவிரி ஆறு, அணை நீர்பரப்பு பகுதிகளில் கரைக்கப்பட்டன. இதுதவிர ஏராளமான சிறு விநாயகர் சிலை-களை, ஏராளமான பக்தர்கள் தனித்தனியே கொண்டு வந்து கரைத்தனர். அதனால், 3 நாட்-களில் மட்டும் மேட்டூர் அணை நீர்பரப்பு பகுதி மற்றும் காவிரியாற்றில், 2,000க்கும் மேற்பட்ட சிலைகளை, பக்தர்கள் கரைத்துள்ளனர்.முன்னதாக சேலம், தர்மபுரி மாவட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள், லாரிகளில் ஏற்றி சிலைகளை கொண்டு வந்தனர். அனைத்து லாரி-களும் மேட்டூர் ஒர்க்ஷாப் கார்னர் வரை மட்டும் போலீசார் அனுமதித்தனர். அங்கு லாரியில் இருந்து பக்தர்கள், விநாயகர் சிலைகளை இறக்கி, அங்கிருந்து அரை கி.மீ.,ல் உள்ள காவிரி ஆற்-றுக்கு சுமந்து சென்றனர். பின் அங்கு வரிசையாக காவிரி ஆற்றுக்கு சென்று சிலைகளை கரைத்-தனர்.
அதேபோல் நேற்று கல்வடங்கம் காவிரி ஆற்றில், 750க்கும் மேற்பட்ட சிலைகள்; பூலாம்-பட்டியில் உள்ள காவிரி ஆறு, குப்பனுார், கூடக்கல் பகுதிகளில் உள்ள காவிரி ஆற்றில், 250க்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டன. இதில் பொது இடங்களில் வைக்கப்பட்ட சிலைகள் மட்டுமின்றி, வீடுகளில் இருந்து பக்-தர்கள் தனித்தனியே கொண்டு வந்த சிறு சிலை-களும் அடங்கும்.
இந்து முன்னணி சார்பில் சேலம், குமாரசாமிப்-பட்டி எல்லைப்பிடாரி அம்மன் கோவில் மற்றும் மாநகரின் பல்வேறு இடங்களில், 65 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. அச்-சிலைகள் நேற்று, அஸ்தம்பட்டி வழியே மூக்க-னேரிக்கு கொண்டு சென்று கரைக்கப்பட்டன. அதேபோல் பலர், வீடுகளில் வைத்து வழிபட்ட சிறு சிலைகளையும், மூக்கனேரியில் கரைத்-தனர்.