Politics
பிரதமர் மோடி பிறந்த நாள்; உலக தலைவர்கள் வாழ்த்து

புதுடில்லி: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் பலர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
பிரதமர் மோடி, இன்று 76வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், கவர்னர்கள் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர். பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
ரஷ்ய அதிபர் புடின்: இந்திய மக்களிடையே மரியாதையையும், சர்வதேச அரங்கில் பெரும் செல்வாக்கையும் பெற்றுள்ள மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். இந்தியா - ரஷ்யா இடையிலான கூட்டணியை வலுப்படுத்துவதில், அவரது தனிப்பட்ட பங்களிப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி: என் நண்பர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அவருக்கு உடல்நலமும், ஆற்றலும், வெற்றியும் கிடைக்க வேண்டுகிறேன்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு: என் நண்பர் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். நாம் இணைந்து நம் கூட்டணியை புதிய உயரங்களுக்கு எடுத்துச் செல்வோம்.