Politics
உலக அரங்கில் பெரும் செல்வாக்கை பெற்றுள்ள பிரதமர் மோடி; ரஷ்ய அதிபர் புடின் வாழ்த்து

புதுடில்லி: பிரதமர் மோடியின் 76வது பிறந்தநாளை முன்னிட்டு, ரஷ்ய அதிபர் புடின் அவருக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.
இது குறித்து ரஷ்ய அதிபர் புடின் கூறியதாவது: பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே மரியாதையையும், உலக அரங்கில் பெரும் செல்வாக்கையும் பெற்றுள்ளார். இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் அவரது தனிப்பட்ட பங்களிப்பு அளப்பரியது.
கடந்த வாரம் டில்லிக்கு நான் மேற்கொண்ட பயணத்தின்போது, எனக்கும் ரஷ்யக் குழுவினருக்கும் அளிக்கப்பட்ட அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாம் நடத்திய பேச்சுவார்த்தைகள் சந்தேகத்திற்கு இடமின்றி வெளிப்படையானதாகவும், பயனுள்ளதாகவும் அமைந்தன. எப்போதும் போலவே, உங்களுடன் உரையாடியது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது; நமது கலந்துரையாடல்கள் உங்கள் தொலைநோக்குப் பார்வையை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தின.
நமது நட்பு நாடுகளின் நலனுக்காக, முக்கியமான இருதரப்பு மற்றும் சர்வதேச விவகாரங்களில் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை நாங்கள் நிச்சயமாகத் தொடருவோம். இவ்வாறு ரஷ்ய அதிபர் புடின் கூறியுள்ளார்.