Politics
"உலக அரங்கில் இணையற்ற செல்வாக்கு" - பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்த ரஷ்ய அதிபர் புதின்!
2022-இல் உக்ரைன் போர் தொடங்கிய பிறகு, ரஷ்யாவிற்கு வெளியே ஒரு பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் புதின் நேரில் கலந்துகொண்டது இதுவே முதல்முறையாகும்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மற்றும் இந்தியாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் பிரதமர் மோடியின் தனிப்பட்ட பங்களிப்பை அவர் வெகுவாகப் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக ரஷ்யா அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீபத்தில் புதுடெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் (BRICS Summit 2026) கலந்துகொள்ள வந்தபோது தனக்கு அளித்த சிறப்பான உபசரிப்பிற்குப் புதின் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய அதிபர் தனது வாழ்த்துச் செய்தியில், "உங்கள் நாட்டு மக்களிடையே நீங்கள் மிகுந்த மரியாதையையும், உலக அரங்கில் பெரும் அதிகாரத்தையும் செல்வாக்கையும் கொண்டுள்ளீர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், "இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான சிறப்புமிக்க மற்றும் முன்னுரிமை பெற்ற பார்ட்னர்ஷிப்பை வலுப்படுத்துவதில் உங்கள் தனிப்பட்ட பங்களிப்பை வார்த்தைகளால் மதிப்பிட முடியாது" என்று புகழ்ந்துரைத்துள்ளார்.
சமீபத்தில் புதுடெல்லியில் நடைபெற்ற இருதரப்புச் சந்திப்பு மிகவும் ஆக்கப்பூர்வமாகவும், வெளிப்படையாகவும், பலனுள்ளதாகவும் அமைந்ததாகப் புதின் வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக "உங்களுடன் கலந்துரையாடுவது எப்போதும் எனக்கு ஒரு உண்மையான மகிழ்ச்சியாகும். நமது பேச்சுவார்த்தைகள் உங்களின் அசாதாரண அரசியல் ஞானத்தையும் தொலைநோக்குப் பார்வையையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளன. நமது நட்பு நாடுகளின் நலனுக்காக இருதரப்பு மற்றும் சர்வதேசப் பிரச்சினைகளில் நமது ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பைத் தொடர்ந்து முன்னெடுப்போம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்காகச் செப்டம்பர் 12-13 தேதிகளில் புதுடெல்லிக்கு வருகை தந்த ரஷ்ய அதிபர் புதின், மாநாட்டின் இடையே பிரதமர் மோடியுடன் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.
Russian President Vladimir Putin sends a message to PM Modi, congratulating him on his 76th birthday
Russian Embassy in India shares the text of the message from President Putin to PM Modi - “You are rightly enjoying deep respect from your compatriots and great authority on the… pic.twitter.com/bYoDlTMloJ
2022-இல் உக்ரைன் போர் தொடங்கிய பிறகு, ரஷ்யாவிற்கு வெளியே ஒரு பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் புதின் நேரில் கலந்துகொண்டது இதுவே முதல்முறையாகும். இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால தூதரக, பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவுகளின் ஆழத்தை இந்த வருகை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
76 வயதிலும் குறையாத சுறுசுறுப்பு... பிரதமர் மோடி பின்பற்றும் ஃபிட்னெஸ் சீக்ரெட் என்ன தெரியுமா?
பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 76வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
அவரது குறையாத சுறுசுறுப்பின் பின்னணி என்ன தெரியுமா?
அந்த ஃபிட்னெஸ் ரகசியம் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை இங்கே தெரிஞ்சுக்கோங்க!
