Religion
அந்தியூர், தாராபுரத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
அந்தியூர்:அந்தியூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், இந்து முன்னணி சார்பில் சதுர்த்தி விழாவையொட்டி, 27
மற்றும் சுற்று வட்டாரத்தில், இந்து முன்னணி சார்பில் சதுர்த்தி
விழாவையொட்டி, 27 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
விசர்ஜனம் செய்ய, அனைத்து சிலைகளும் சிங்கார வீதி, தேர்வீதி, பர்கூர்
ரோடு மற்றும் ராஜவீதி வழியே ஊர்வலம் சென்றது. அதன்பின், சிலைகள்
அனைத்தும் அத்தாணியிலுள்ள பவானியாற்றில் பாதுகாப்பாக
கரைக்கப்பட்டன. அந்தியூர் இன்ஸ்பெக்டர் சண்முகவேலு தலைமையில்,
70-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.*
தாராபுரம் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில், 70க்கும் மேற்பட்ட
இடங்களில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நேற்று
தாராபுரம், அமராவதி சிலை ரவுண்டானா பகுதியில் வாகனங்களில் எடுத்து
வரப்பட்டது. அங்கு பாரம்பரிய வள்ளி, கும்மி ஆட்டம் நிகழ்ச்சியை
அடுத்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பா.ஜ., மாநில செயலாளர்
அஸ்வத்தாமன் பேசினார்.
செய்யப்பட்டு, இந்து முன்னணி கோட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில்,
விநாயகர் ஊர்வலம் துவங்கியது. ஊர்வலத்தில் பைக்கு
நடந்தும், காவிக் கொடிகளை ஏந்தியவாறு, நாதஸ்வர மேளம் முழங்க, இளம்
பெண்கள் மற்றும் சிறுமியர் அணி வகுத்து சென்றனர். நிறைவாக,
அகஸ்தீஸ்வரர் கோவில் படித்துறை அருகே, அமராவதி ஆற்றில், விநாயகர்
சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன.
வட்டார பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், நேற்று
எஸ்.ஆர்.டி., கார்னரில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டது. இந்து
முன்னணி மூத்த நிர்வாகி குருசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
முக்கிய வீதிகள் வழியாக சென்று பவானி ஆற்றில் கரைக்கப்பட்டன. இந்து
முன்னணி சார்பில் 40 சிலைகள், பொதுமக்கள் சார்பில், 100க்கும் மேற்பட்ட
சிலைகள் பவானி ஆற்றில் கரைக்கப்பட்டன. ஈரோடு எஸ்.பி.,கிரண் ஸ்ருதி
தலைமையில், 350 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அத்தாணி,
கள்ளிபட்டி, டி.என்.,பாளையம், நால்ரோடு ஆகிய பகுதிகளில் இருந்து
சத்தியமங்கலம் நோக்கி வந்த பஸ்கள் அனைத்தும், கொடிவேரி பிரிவில்
பயணிகளை இறக்கி விட்டு சென்றதால், 2 கி.மீ., துாரம் பயணி
கள் நடந்து சென்றனர்.