Religion
விநாயகர் சதுர்த்தி விழா ;விதிமுறைகளை பின்பற்ற உத்தரவு
சூலூர்:விதிமுறைகளை பின்பற்றி விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் ஊர்வலத்தை நடத்த வேண்டும், என, போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
நாடு முழுவதும் வரும், 14 ம்தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடக்கிறது. இந்து முன்னணி உள்ளிட்ட இந்து இயக்கங்கள் சார்பில், சுல்தான்பேட்டை ஒன்றியத்தில், 40 க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. இதையொட்டி, சுல்தான்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் ஆலோசனை கூட்டம் இன்ஸ்பெக்டர் காந்திமதி தலைமையில் நடந்தது. இந்து இயக்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அனுமதி வழங்கப்பட்டவர்கள் மட்டுமே பொது இடத்தில் சிலைகள் வைக்க வேண்டும். தீயணைப்பு துறை, மின் வாரியத்திடம் தடையில்லா சான்று பெற வேண்டும். தனியார் இடம் எனில், உரிமையாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். ஒவ்வொரு சிலைக்கும், இரு நிர்வாகிகள் பொறுப்பாளர்களாக இருக்க வேண்டும். போலீசார் சுழற்சி முறையில், பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். சிலையின் உயரம், 10 அடிக்கு மேல் இருக்க கூடாது. விதிமுறைகளை பின்பற்றி விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் ஊர்வலத்தை நடத்த வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடத்தில் விசர்ஜன கூட்டம் நடத்திட வேண்டும்.
இவ்வாறு, போலீசார் பேசினர்.