Sport
இந்தியாவுக்கு 113 பதக்கம்: சுமித் நாகல் கணிப்பு

புதுடில்லி: ''ஆசிய விளையாட்டில் இம்முறை இந்தியாவுக்கு 113 பதக்கம் கிடைக்கும்,'' என, டென்னிஸ் வீரர் சுமித் நாகல் கணித்துள்ளார்.
ஜப்பானின் அய்ச்சி, -நகோயா நகரங்களில், வரும் செப். 19 முதல் அக். 4 வரை ஆசிய விளையாட்டு 20வது சீசன் நடக்கிறது. இந்தியா சார்பில் 35 வகையான விளையாட்டில், 267 வீரர், 234 வீராங்கனைகள் என மொத்தம் 501 பேர் களமிறங்குகின்றனர். தடகளத்தில் அதிகபட்சமாக 79 பேர் (36 வீரர், 43 வீராங்கனைகள்) பங்கேற்கின்றனர். இவர்களுடன் 265 உதவியாளர்கள் சென்றுள்ளனர்.
ஆசிய விளையாட்டு வரலாற்றில், கடந்த முறை (2022) 28 தங்கம், 38 வெள்ளி, 40 வெண்கலம் என, அதிகபட்சமாக 106 பதக்கம் கைப்பற்றிய இந்தியா, பதக்கப்பட்டியலில் 4வது இடம் பிடித்தது. இதேபோல இம்முறை இந்தியாவின் பதக்க எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய டென்னிஸ் வீரர் சுமித் நாகல் கூறுகையில், ''ஆசிய விளையாட்டில் இம்முறை டென்னிசில் இந்தியாவுக்கு 3 பதக்கம் உறுதி. ஒட்டுமொத்தமாக 113 பதக்கம் கிடைக்கும்'' என்றார்.