Lifestyle and human interest
பிரதமர் மோடிக்காக ஆசிர்வாத தீபம் ஏற்றிய மக்கள்: நாடு முழுதும் உற்சாகம்

புதுடில்லி: பிரதமர் மோடிக்காக நாடு முழுவதும் ஏராளமானோர் தங்களது வீடுகள், பொது இடங்கள், ஆற்றங்கரையோரம் உள்ளிட்ட பல இடங்களில் ஆசிர்வாத தீபம் ஏற்றினர்.
பிரதமர் மோடியின் பிறந்தநாளை ஒட்டியும், அவர் பொது வாழ்வில் தொடர்ந்து 25 ஆண்டுகளை நிறைவு செய்வதைக் குறிக்கும் வகையிலும், நாடு முழுவதும் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 17 வரை ஒரு மாத காலத்திற்கு பல்வேறு பொதுநல சேவைகளை செய்யும் இயக்கத்தை துவங்க பாஜ திட்டமிட்டு உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. செப்டம்பர் 17ல் மக்கள் தங்களது வீடுகளில் விளக்கு ஏற்றுமாறு பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.
குஜராத் ஆமதாபாத்தின் விஸ்வ உமியதாம் பகுதியில் 76 ஆயிரம் விளக்குகள் ஏற்றப்பட்டன.
பீஹார் தலைநகர் பாட்னாவின் மெரைன் டிரைவ் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் சம்ராட் சவுத்ரி குத்துவிளக்கு ஏற்றினார்.
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினியின் சிப்ரா நதிக்கரையில் ஆசிர்வாதம் தீபம் ஏற்றப்பட்டது.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்த நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி தலைவர் விளக்குஏற்றினார்.
டில்லி முதல்வர் ரேகா குப்தா கர்தவயா பாதையில் விளக்கு ஏற்றினார்.
டில்லியில் நிஜாமுதீன் தர்ஹாவில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, பாஜ செய்தித்தொடர்பாளர் சையத் ஷாநவாஸ் ஹூசைன் ஆகியோர் விளக்கு ஏற்றினர்.
உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி டேராடூனில் ஆரத்தி எடுத்தார்.
மேற்கு வங்க மாநில பாஜ தலைவர் சமிக் பட்டாச்சார்யா மற்றும் பாஜ தலைவர்கள் இணைந்து விளக்கு ஏற்றினர்.
பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, கோல்கட்டாவின் கடம்தாலா படித்துறையில் நடந்த நிகழ்வில் முதல்வர் முதல்வர் சுவேந்து அதிகாரி ஆசிர்வாத தீபம் ஏற்றினார்.
லக்னோவில் நடந்த நிகழ்ச்சியில் உபி கவர்னர் ஆனந்திபென்படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர்கள் பிரஜேஷ் படேல் கேசவ் பிரசாத் மவுரியா ஆகியோர் ஆசிர்வாத தீபம் ஏற்றினர்.
டில்லியில் மத்திய அமைச்சர்அஸ்வினிவைஷ்ணவ் ஆசிர்வாத தீபம் ஏற்றினார்.
பாஜ எம்பி கங்கனா ரணாவத் தனது வீட்டில் ஆசிர்வாத தீபம் ஏற்றிய புகைப்படத்தை சமூகஊடகத்தில் பகிர்ந்துள்ளார்.
மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்கும் தனது இல்லத்தில் ஆசிர்வாத தீபம் ஏற்றினார்.
மும்பையில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் ,பியூஷ் கோயல் ஆசிர்வாதம் தீபம் ஏற்றினர்.
சத்தீஸ்கரில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் விஷ்ணு தியோ சாய் பங்கேற்று விளக்கு ஏற்றினார்.
இன்னும் ஏராளமான பொது மக்கள் மற்றும் பாஜவினர் தீபம் ஏற்றிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
சத்தீஸ்கர் மாநிலம் மகாதேவ் படித்துறையில் ஆயிரக்கணக்கான விளக்குகள் ஏற்றப்பட்டன