Sport
முதல்வர் கோப்பை திருவிழா 9ல் துவக்கம்
திருப்பூர்:மாநில முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிக்கான திருப்பூர் மாவட்டத் தேர்வுப் போட்டிகள் வரும் 9ம்
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிக்கான திருப்பூர் மாவட்டத்
தேர்வுப் போட்டிகள் வரும் 9ம் தேதி துவங்கி, 20ம் தேதி வரை
நடைபெறுகின்றன. இதில் பங்கேற்க, பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அரசு
ஊழியர்கள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் என, 63 ஆயிரத்து 639
பேர் விண்ணப்பித்துள்ளனர்.
மாவட்ட அளவிலான போட்டிகளை இம்மாதத்துக்குள் முடிக்க விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திட்டமிட்டுள்ளது.திருப்பூர்
மாவட்டத்தில் இருந்து, 32 ஆயிரத்து 981 பள்ளி மாணவ, மாணவியர்; 18
ஆயிரத்து 761 கல்லுாரி மாணவ, மாணவியர்; 2,422 அரசு ஊழியர்கள்; 581
மாற்றுத்திறனாளிகள்; 8,901 பொதுமக்கள் என மொத்தம் 63 ஆயிரத்து
639 பேர் விண்ணப்பித்துள்ளனர். பள்ளி மாணவர்களுக்கான தடகளம்,
இறகுபந்து, டேபிள் டென்னிஸ், வாலிபால், கால்பந்து, கபடி,
கூடைப்பந்து, சிலம்பம், கிரிக்கெட், நீச்சல், எறிபந்து, கோ-கோ, கேரம்,
செஸ், ஸ்பீடு ஸ்கேட்டிங், யோகாசனம் உள்ளிட்ட போட்டிகள் வரும் 9
முதல் 16ம் தேதி வரை நடைபெறுகின்றன.
மாணவர்கள், அரசு ஊழியர்கள், பொதுப்பிரிவு மற்றும்
மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் நடத்தப்பட உள்ளன.