Religion
நாளை விநாயகர் சதுர்த்தி விழா பிரமாண்ட செட் அமைக்கும் பணி
ஓசூர்: ஓசூரில் நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், பிரமாண்ட செட் அமைத்து, சிலைகளை பிர-திஷ்டை செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது.தமிழக எல்லையிலுள்ள ஓசூர் நகரில், ஆண்டுதோறும் விநா-யகர் சதுர்த்தியின் போது, மும்பை நகருக்கு இணையாக பிர-மாண்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்-படும். ஒரு வாரத்திற்கு மேல் பூஜை செய்த பின், சிலைகள் நீர்நி-லைகளில் கரைக்கப்படும். இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படும் நிலையில், ஓசூரில் சிலைகளை பிரதிஷ்டை செய்யும் பணிகள், செட் அமைக்கும் பணிகள் தீவிர-மாக நடக்கின்றன.
ஓசூர் ராம்ராஜ் கார்டன் அருகே, ஹிந்து ஜனசேனா அமைப்பின் நிறுவனர் முரளிமோகன் தலைமையில், கெலவரப்பள்ளி அணையை மீட்டெடுப்போம் என்பதை வலியுறுத்தி, பிரமாண்ட செட் அமைத்து, அதற்குள் விவசாயம் செய்வது போல் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.குறிப்பாக, களை எடுப்பது, விதை விதைப்பது, நாற்று நடுவது, தண்ணீர் பாய்ச்சுவது, அறுவடை செய்வது போன்று விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. கெலவரப்பள்ளி அணையின் மாதிரியும் அமைக்கப்பட்டுள்ளது. கெலவரப்பள்ளி அணை தற்-போது மாசடைந்துள்ளதால், அதன் மூலம் கங்காதேவி பாதிக்கப்ப-டுவது போல், அவரை துாக்கி வைத்து சிவன் ஆடுவது போன்ற பிரமாண்ட சிலையும் அமைக்கப்பட உள்ளது.
ஓசூர் ஜெனப்பர் தெருவில், பழமையான கோவில்கள் எப்படி இருக்குமோ, அதேபோல் செட் அமைத்து, அதற்குள் மிருதங்கம் வாசிப்பது போல் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யும் பணி நடக்கிறது. ஓசூர் ராயக்கோட்டை சாலையில், சீனிவாசா தியேட்டர் எதிரே, எம்.என்., நற்பணி மன்றம் சார்பில் அமைக்கப்-படும் பிரம்மாண்ட செட்டிற்குள், யானை முகம் கொண்ட கஜமுக-சூரனை வதம் செய்து போன்ற விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்-யப்பட உள்ளது.
தேன்கனிக்கோட்டையில், காந்தாரா - 2 திரைப்படத்தின் காட்-சிகள் இடம் பெறும் வகையில், செட் அமைத்து, அதற்குள் சிலை அமைக்கப்படுகிறது. இதுபோன்ற, பல்வேறு சிலைகளை பிர-திஷ்டை செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது. இதனால், ஓசூர் நகரம் விநாயகர் சதுர்த்தி விழாவால் களை கட்டியுள்ளது.