Sport
நீலகிரியில் தொடங்கியது முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி... 1,711 மாணவர்கள் பங்கேற்பு..!

நீலகிரி மாவட்டத்தில் இன்று தொடங்கிய முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் முதல் நாளில் 1,711 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடங்கின. உதகை எச்.ஏ.டி.பி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வை மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு தொடங்கி வைத்து, வீரர்களுடன் கலந்துரையாடினார். முதல் நாளில் 1,711 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
