Politics
"அதிமுகவில் ராஜினாமா செய்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்..." - அமை...

அதிமுகவில் ராஜினாமா செய்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குவது குறித்து முதல்வர் விஜய் முடிவெடுப்பார் என சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
ரத்தீஷ் மாதிரியான பவர் புரோக்கர்களை வைத்து கடந்த திமுக அரசை நடத்தி இருக்கிறார்கள் என சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் குற்றம்சாட்டினார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொது செயலாளர் டி ராஜாவை எரிசக்தி துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் சந்தித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், "கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ராஜாவின் உடல்நல பரிசோதனைக்காக வந்துள்ளார். அவர்களை பார்த்து நலம் விசாரிக்க வந்தோம்.” என்றார்.
இன்று நடைபெற உள்ள கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் பங்கேற்க போவதில்லை என்று தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், "தேர்தல் நேரத்தில்தான் கட்சிகளுடன் கூட்டணி இருக்கும் திமுக உடனும் அவர்கள் அப்படிதான் தொகுதி உடன்பாடு வைத்திருக்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சிக்கு ஆதரவு உள்ளது என்று தெரிவித்துள்ளார்கள். மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ, அது முழு அளவில் இருக்கப் போகிறது. மக்களுக்கான அரசாக இருக்கும் இதில் எந்த மாற்றமும் இருக்கப் போவதில்லை” என்றார்.
மிசா தொடர்பான வழக்கு விவரங்களை தமிழக வெற்றி கழகத்தினர் படிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் பேசியது குறித்த கேள்விக்கு, இது தொடர்பாக அதிக விவாதங்கள் நடந்து விட்டது. எதனால் கைது செய்யப்பட்டார் என்று சட்டசபையில்கூட நடந்துள்ளது.
இஸ்மாயில் கமிட்டியில் யாரெல்லாம் அந்த நேரத்தில் சிறையில் தாக்கப்பட்டார்கள் என்பதற்கான குறிப்பாக சிட்டிபாபு மரணத்தில் சாட்சியாளராகத்தான் சேர்க்கப்பட்டார் இதற்குள் செல்ல வேண்டாம்.” என்றார்.
பழைய விஷயங்கள் குறித்து தான் அதிகம் பேசுகிறார்கள் என்று குற்றச்சாட்டு எழுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல்குமார், "திமுக செய்த துரோகங்கள் தவறுகள் இருந்து தமிழ்நாட்டை எப்படி மாற்றி வருகிறோம் என்று சொல்ல வேண்டும். காவேரியில் தவறவிட்டதை கொண்டுவர நாற்பது ஆண்டுகள் ஆனது. கடந்த ஐந்து ஆண்டுகளில் செய்த தவறுகளை பழைய நிலைக்கு மாற்றிக் கொண்டு வர எப்படி போராடுகிறோம் என்று தெரிந்து கொள்ள வேண்டும். எல்லாத்துறையும் எவ்வளவு மோசமாக உள்ளது என்று சொல்லிதான் ஆக வேண்டும்." என்றார்.
தொடர்ந்து பேசும்போது, "எவ்வளவு தூரம் மக்களை ஏமாற்றிக் கொண்டு உள்ளார்கள், மூன்று தலைமுறை 70 ஆண்டு கட்சி எல்லாம் சரிதான், மக்களுக்கு என்ன செய்தீர்கள்? எதைச் சொல்லி மக்களை ஏமாற்றிக் கொண்டுள்ளீர்கள் என்று மக்களுக்கு இன்று உள்ள தலைமுறைக்கு தெரியப்படுத்த வேண்டும். இதிலிருந்து என்ன மீட்டு கொண்டு வருகிறோம் என்று தெரிய வேண்டும். எவ்வளவு தூரம் அரசு துறையை கெடுத்து வைத்து இருக்கிறார்கள் எதிலிருந்து மீட்கிறோம் என்று தெரிய வேண்டும். காவிரியில் என்ன செய்தீர்கள் என்று தெரிந்தால் தான் எப்படி மீட்கிறார்கள் என்று தெரியும். ஒவ்வொரு விஷயத்திலும் என்ன தவறவிட்டார்கள் தவறு செய்தார்கள் என்று சொல்லித்தான் ஆகவேண்டும்." என்றார்.
மேலும் அவர் பேசும்போது,"சர்க்காரியா கமிஷன் அமைக்கிறோம் என்று கேவல் சிங்கை வைத்து சிபிஐ வழக்கு தொடுப்போம் என்று சொன்ன பிறகுதான் கச்ச தீவை தாரை வார்த்தீர்கள். நீங்கள் செய்த தவறுதான் சொல்லித்தான் ஆக வேண்டும். 76 ஆம் ஆண்டு வழக்கு விசாரணை வரும் பொழுது விரட்டப்பட்டதன் கச்சத்தீவு தொடர்பாக வெளியிடவில்லை. கலைஞருக்கு இது தொடர்பாக முன்பே தெரியும். இதை தடுத்து இருந்தால் 50 ஆண்டுகள் மீனவர்கள் கஷ்டப்பட்டு இருக்க வேண்டிய தேவையில்லை யார் பொறுப்பு ஏற்பார்கள் இதை இன்றைய தலைமுறைக்கு சொல்லியாக வேண்டிய தேவை உள்ளது.” என்றார்.
ரதீஷ் என்பவர் குறித்து முன்பே தெரியும் என்றால் அவர் துபாய் போவதை தடுத்து இருக்கலாமே என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல்குமார் "முதல் தகவல் அறிக்கை போட்ட உடன் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது நடைமுறையை காவல்துறை தெளிவாக செய்து வருகிறது. எதற்காக ரத்தீஷ் பெயரை முதலமைச்சர் பதிவு செய்தார் என்றால் அரசை முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் நடத்தலாம் ரத்தீஷ் என்ற தனிப்பட்ட நபரோ மாப்பிள்ளை உடன் இருக்கும் நண்பர்களோ நடத்தக்கூடாது. அரசை ரத்தீஷ் என்பவர் நடத்துவது அதிகாரிகள் அவரை பார்ப்பது 10 பேர் அமர்ந்து கொண்டு குறைகளை பிரித்துக் கொண்டு வசூல் செய்வது.
ரதீஷ் என்பவருக்கு அரசியலும் தெரியாது மக்களைப் பற்றியும் தெரியாது. மாப்பிள்ளை உடன் இருக்கும் 10 பேரும் மகனுடன் இருக்கும் 10 பேரும் அரசை நடத்தி உள்ளார்கள்.
எதுவும் தெரியாமல் டாஸ்மாக்கில் வசூல் மட்டும் செய்து கொண்டுள்ள ரத்தீஷ் போன்ற பவர் புரோக்கர்களை வைத்து அரசை நடத்தி உள்ளார்கள். இதை மக்களுக்கு சொல்ல வேண்டியுள்ளது. இதிலிருந்து மாற்ற வேண்டி உள்ளது புரையோடி உள்ள சிஸ்டங்களை மாற்றுகிறோம் என்று மக்களுக்கு தெரிய வேண்டும்.
இதற்கு முன்பு அரசு எப்படி செயல்பட்டு வந்தது ரத்தீஷ் என்பவர் ஏன் மறைந்துள்ளார் குறிஞ்சி இல்லத்தில் உதயநிதி உடன் 24 மணி நேரம் இருந்தவர்தான் ரத்தீஷ் என்பவர். அவர் பவர் புரோக்கர் நான்கு ஐந்து துறைகளில் வசூல் செய்து கொண்டிருந்தால், இது சொல்லாமல் எப்படி இருக்க முடியும். ஏற்கனவே முதல் தகவல் அறிக்கை போடப்பட்டுவிட்டது லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அவர்களைப் போல் இரவில் யாரையும் கைது செய்யப் போவதில்லை பல மர்மமான விஷயங்களை செய்யப்போவதில்லை அண்ணாநகர் ரமேஷ் போன்ற விஷயங்களை மக்கள் மறந்திருப்பார்கள். அதை எடுத்து சொல்ல வேண்டிய அவசியம் உள்ளது.
அந்தந்த காலகட்டத்தில் திமுக என்ன மாதிரியான நபர்கள் என்று சொல்ல வேண்டும் மக்கள் மறந்திருப்பார்கள் மக்கள் இவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் எப்படிப்பட்ட சிஸ்டமை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் அதை எப்படி மாற்ற வேண்டும் என்று சொல்ல வேண்டும்.
புதிதாக ஒரு உயிர் கொடுத்துக் கொண்டுள்ளோம் ஒரு செடி வளர்த்துக் கொண்டு உள்ளோம். புரையோடி கொண்டிருந்த மரத்தை சாய்த்து விட்டு புது செடியை வளர்த்து வருகிறோம் அடிப்படையில் இருந்து மாற்றுகிறோம் எதை செய்ய முடியுமோ அனைத்தையும் தமிழக முதலமைச்சர் செய்கிறார் ஒவ்வொரு நாளும் கண்ணும் கருத்துமாக மக்களுக்கு செய்ய வேண்டியதை செய்கிறார்.
எப்படி எல்லாம் அரசுக்கு குடைச்சல் கொடுக்க முடியுமோ செய்து வருகிறார்கள். கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் மீனவர்கள் பாதிக்கிறார்கள் என்று சொல்கிறார்கள் கச்சத்தீவை தாரை வார்த்தது நீங்கள்தான் செய்த தவறு என்று சொல்வதில் என்ன தவறு.
டாஸ்மாக்கில் பத்து ரூபாய் சிஸ்டத்தை கொண்டு வந்தது யார். சொல்ல வேண்டிய விஷயங்கள் இவர்கள் மறைத்த விஷயங்களை சொன்னால் தான் எதிலிருந்து சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என்பதை சொல்லி தான் ஆக வேண்டும்.
இதையும் படிங்க: "இந்த விஷயத்தில் என்னை யாரும் பின்பற்ற வேண்டாம்..." - 'சிக்மா' பட விழாவில் ஜேசன் சஞ்சய் சுவாரஸ்யம்! | Jason Sanjay
இடைத்தேர்தலில் அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, அது தொடர்பாக முதலமைச்சர்தான் முடிவு செய்வார் என்று பதிலளித்தார்.
