Sport
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி: கலெக்டர் துவங்கி வைப்பு

கள்ளக்குறிச்சி: ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியை கலெக்டர் துவங்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பத்மஜா தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., ஜீவா, சி.இ.ஓ., கார்த்திகா, மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தனர். நடப்பாண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி, பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளில் வரும் 26ம் தேதி வரை நடக்கிறது.
போட்டியை கலெக்டர் பத்மஜா கொடியசைத்து துவங்கி வைத்தார். ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தடகள போட்டிகள், வாலிபால், கோ-கோ, பேஸ்கட் பால் போட்டிகள் நடக்கிறது. கள்ளக்குறிச்சி ஐ-ஷட்டல் ஸ்டுடியோவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேட்மிட்டன் போட்டியும், தியாகதுருகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான டேபிள் டென்னிஸ், கேரம் போட்டியும் நடக்கிறது.
இதில், வெற்றி பெறும் நபர்களுக்கு முதல் பரிசாக ரூ.3 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.2ஆயிரமும், மூன்றாம் பரிசாக ஆயிரம் ரூபாயும் இத்துடன் பதக்கம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது. மேலும், இதில் முதலிடம் பெறுபவர்கள் அடுத்த கட்டமாக மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பர்.



/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

