Religion
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத விநாயகர் சிலை... விதை, காகிதக் கூழ் மூலம் தயாராகும் விநாயகர் சிலைகள்..!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுச்சேரி பிள்ளையார்குப்பத்தில் விதைகள், காகிதம் மற்றும் மண்ணால் சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, புதுச்சேரி பிள்ளையார்குப்பம் பகுதியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் விதைகள் மற்றும் காகிதத்தால் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் விற்பனைக்காக தயாரிக்கப்பட்டு வருகின்றன.
பாரம்பரியமாக பல தலைமுறைகளாக விநாயகர் சிலைகள் தயாரித்து வரும் கலைஞர்கள், பொதுமக்களின் தேவைக்கேற்ப பல்வேறு அளவுகள் மற்றும் வித்தியாசமான வடிவங்களில் சிலைகளை உருவாக்கி வருகின்றனர்.
மண்ணால் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் முதல் காகிதத்தால் உருவாக்கப்படும் சிலைகள் வரை பல்வேறு வகைகள் இங்கு கிடைக்கின்றன. சிறிய அளவிலான சிலைகள் முதல் சுமார் 12 முதல் 13 அடி உயரம் கொண்ட பெரிய சிலைகள் வரை தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: மழைக்கு முன் சீரமைப்பு, மழைக்குப் பின் புதிய சாலைகள்: சென்னை மாநகராட்சியின் அதிரடி திட்டம்..!
இந்த ஆண்டு புதிதாக நான்கு மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக 50-க்கும் மேற்பட்ட வித்தியாசமான வடிவங்களில் சிலைகள் தயாராகி வருகின்றன.
ரூ.3,000 முதல் ரூ.15,000 வரை பல்வேறு அளவுகளில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு உள்ளன. குறிப்பாக விதைகள் மற்றும் காகிதம் உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை பயன்படுத்தி சிலைகள் தயாரிக்கப்படுவதால், விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும்போது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
