Politics
ரூ.15,300 கோடி முதலீட்டு ஒப்பந்தங்கள்; முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் வெற்றி என அரசு பெருமிதம்

சென்னை: தமிழகத்தை உலகின் முன்னணி முதலீட்டு மற்றும் தொழில் வளர்ச்சி மையமாக உயர்த்திடும் நோக்கில் முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் வெற்றிப் பயணமாக அமைந்துள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளார்.
லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று (செப் 17) காலை முதல்வர் விஜய் சென்னை திருப்பினார். இந்த பயணம் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் உலகின் முன்னணி முதலீடு, வளர்ச்சி மையமாக உயர்த்தும் நோக்கில் முதல்வர் விஜய் லண்டன் பயணம் அமைந்தது. விஜய்யின் இங்கிலாந்து பயணம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, முதலீட்டு ஈர்ப்புக்கு மைல்கல்.
முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ரூ.15,300 கோடி முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் மூலம் 10,000க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு உருவாகும். நம்பிக்கைக்குரிய தொழில் முதலீட்டு மையமாக தமிழ்நாட்டை நிலைநிறுத்தும் வெளிநாட்டு பயணம் தொடரும். லண்டன் பயணத்தின் போது முதல்வர் விஜய்க்கு நல்லாதரவு அளித்த அந்நாட்டில் வாழும் தமிழ் சொந்தங்களுக்கு முதல்வர் விஜய் நன்றி தெரிவித்துக்கொண்டார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரத்யேக வீடியோ!
முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் வெற்றி; ஈர்த்த முதலீடுகள் முழு விவரம் குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு