Sport
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நாளை துவக்கம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 2026 ம் ஆண்டிற்கான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2026 ம் ஆண்டிற்கான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நாளை(செப்.7) முதல் அக்.5 வரை நடக்கவுள்ளது.
பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம். மாவட்ட அளவிலான போட்டிகள் செப்.7 ல் துவங்குகிறது. இதில் தடகளம், கால்பந்து, வாலிபால், கபடி, இறகுப்பந்து, கூடைப்பந்து, கேரம், சிலம்பம், நீச்சல், செஸ், ஜூடோ, கிரிக்கெட், கோ-கோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும். பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் செப்.7 முதல் அக்.3 வரையிலும், கல்லுாரி மாணவர்களுக்கான போட்டிகள் செப்.7 முதல் செப்.22 வரையிலும் நடக்கின்றன. அரசுப் பணியாளர்களுக்கான போட்டிகள் செப்.25 ம் தேதியும், மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் அக்.1 ம் தேதியும், பொதுப்பிரிவுக்கான போட்டிகள் அக். 19, 21, 25 ஆகிய தினங்களிலும் நடக்கவுள்ளன.
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான மண்டல அளவிலான போட்டிகள் மதுரையில் நடக்கவுள்ளன. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்கள் மட்டும் தான் போட்டியில் கலந்து கொள்ள முடியும். மாணவர்கள், அரசு பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் தங்களது அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையை சமர்ப்பிக்க வேண்டும். பொதுப்பிரினர் இருப்பிடச் சான்றிதழ் மற்றும் ஆதார் கார்டு சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தை நேரிலோ, 04567–-230 238 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.