Religion
விநாயகர் சிலை ஊர்வலம் எஸ்.பி., ஆபீசில் ஆலோசனை
ஈரோடு:ஈரோட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் மற்றும் ஊர்வலம் தொடர்பாக, 2வது நாளாக எஸ்.பி., அலுவலகத்தில்
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் மற்றும் ஊர்வலம் தொடர்பாக, 2வது
நாளாக எஸ்.பி., அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
சதுர்த்தி வரும் 14ல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஹிந்து
முன்னணி சார்பில் விநாயகர் சிலைகளை மாவட்டம் முழுவதும் பிரதிஷ்டை
செய்ய உள்ளனர். சிலைகள் பின்னர் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, நீர்
நிலைகளில் கரைக்கப்பட உள்ளது.
சிலை ஊர்வலம் நடக்கிறது. விநாயகர் சிலை பிரதிஷ்டை, கொண்டாட்டம்,
ஊர்வலத்தை அமைதியாக நடத்தும் வகையில் கூட்டம் நடத்தப்படுகிறது.
நாட்களாக, ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் எஸ்.பி கிரண் ஸ்ருதி
முன்னிலையில் நடந்த கூட்டத்தில், ஊர்வலம் அமைதியான முறையில்
நடப்பது குறித்து அறிவுறுத்தப்பட்டது. மாவட்டத்தில் 14ல் விநாயகர்
சதுர்த்தியன்று கோபி, கவுந்தப்பாடி, பங்களாபுதுார்,
அம்மாபேட்டையிலும், 15ல் தாளவாடி, கோபியில், 16ல் சத்தி,
காஞ்சிகோவில், அந்தியூர், கோபியிலும், 17ல் ஈரோடு மாநகரிலும்,
18ல் புளியம்பட்டி, 20ல் மொடக்குறிச்சி, 21ல் ஆப்பகூடலிலும்
விநாயகர் சிலை ஊர்வலம் நடக்கிறது.