Religion
2,336 சிலை பிரதிஷ்டை செய்து சதுர்த்தி கொண்டாட திட்டம்
கோவை: நாளை மறுதினம் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. பா.ஜ.,இந்து முன்னணி, விஷ்வஹிந்து பரிஷத், பாரத்சேனா, அனுமன்சேனா, இ.ம.க., விவேகானந்தர் பேரவை, குடியிருப்போர் நல சங்கங்கள் உள்ளிட்ட அமைப்புகள் பொதுஇடங்களிலும் குடியிருப்பு வளாகங்கள் என்று நகரில் 708 இடங்களிலும், புறநகரில் 1,628 இடங்களிலும் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய உள்ளனர்.
விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யும் இடங்களில் பந்தல், மேடை, அலங்கார வளைவுகள் அமைத்து அழகுபடுத்தி வருகின்றனர். மக்கள் தரிசிப்பதற்கேற்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. விசர்ஜனம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.