Arts, culture, entertainment and media
பெட்டிக்கு ரூ.5 வழங்கக்கோரி சுமைப்பணியாளர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்:மது பெட்டியை அடுக்கி வைக்க, பெட்டி ஒன்றுக்கு, ஐந்து ரூபாய் கேட்டு, நாமக்கல்லில், டாஸ்மாக்
பெட்டியை அடுக்கி வைக்க, பெட்டி ஒன்றுக்கு, ஐந்து ரூபாய் கேட்டு,
நாமக்கல்லில், டாஸ்மாக் டிரான்ஸ்போர்ட் டெலிவரி சுமைப்பணியாளர்கள்,
சி.ஐ.டி.யு., ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
டாஸ்மாக் குடோன் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க தலைவர்
பாண்டியன் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் வேலுசாமி
கோரிக்கை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில், டாஸ்மாக்
டிரான்ஸ்போர்ட் டெலிவரி சுமைப்பணி தொழிலாளர்களுக்கு, லாரியில் கொண்டு
சென்று கடைகள் முன் இறக்கி வைக்கும் பணிக்கும், கடைகளுக்குள் கொண்டு
சென்று அட்டி போட்டு அடுக்கி வைப்பதற்கும் பெட்டி ஒன்றுக்கு ரூ.10.00
வழங்க வேண்டும். டிரைவர்களுக்கு நாள் ஒன்றுக்கு, 1,000 ரூபாய் வழங்க
வேண்டும். அனைத்து டிரான்ஸ்போர்ட் டெலிவரி சுமைப்பணி
தொழிலாளர்களுக்கும் சட்டப்படி பி.ஹெப்., இ.எஸ்.ஐ., அமல்படுத்த
வேண்டும்.
கடைகளுக்குள் சென்று அட்டி பேட்டு வைக்க, பெட்டி
ஒன்றுக்கு, 5 ரூபாய் வழங்க வேண்டும். மதுபான பெட்டிகளை லாரிகளில்
கொண்டுச்செல்லும் போது அதிர்வில் உடைந்து போகும்
மதுபாட்டில்களுக்குண்டான தொகையை தொழிலாளர்களிடம் வற்புறுத்தி
வசூலிக்கும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.