Lifestyle and human interest
கோவிலில் சிறப்பு பூஜை
சூலுார்: பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை ஒட்டி, சூலுார் கிழக்கு ஒன்றிய பா.ஜ., நிர்வாகிகள், சூலுார் வைத்திஸ்வரன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர். பிரதமர் மோடி நீண்ட ஆயுள், ஆரோக்கியத்துடன் வாழ்ந்து, நாட்டை வழி நடத்த வேண்டி, கூட்டுப் பிரார்த்தனை நடத்தினர். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், அவர்களது உறவினர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
கோவை வடக்கு மாவட்ட துணைத்தலைவர் முருகேசன், ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் மணி, இணை ஒருங்கிணைப்பாளர் அசோக், முன்னாள் நகர தலைவர் ரவிசந்திரன், விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
காரமடை அரங்கநாதர் கோவிலில் பா.ஜ., சார்பில் சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது. பா.ஜ., வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் விக்னேஷ், காரமடை நகர தலைவர் சதீஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.