Religion
விநாயகர் சிலைகள் ஊர்வலம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம், திருநகர் உள்பட நகரின் பல்வேறு இடங்களில் அகில பாரத அனுமன் சேனா, ஹிந்து முன்னணி, ஹிந்து மக்கள் கட்சி, பா.ஜ., சார்பில் விநாயகர் சதுர்த்தியன்று 61 மெகா விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. இந்த சிலைகள் நேற்று மாலை 16 கால் மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டன.
அங்கு பூஜை, தீபாராதனை நடந்தது. பின் கீழரத வீதி, பெரிய ரத வீதி வழியாக ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்ட சிலைகள், செவ்வந்தி குளம் கண்மாயில் கரைக்கப்பட்டன. இதில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.