Arts, culture, entertainment and media
சரக்கு தட்டுப்பாடு: டாஸ்மாக் கடைகள் மூடல்
கடலுார்: விருத்தாசலம் பகுதியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகள் சரக்கு தட்டுப்பாடு காரணமாக நேற்று விற்பனை செய்யாமல் மூடப்பட்டன.
டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில் திருப்பி கொடுத்தால் மதுபாட்டிலுக்கு 10 ரூபாய் குறைத்து விற்பனை செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி பல இடங்களில் குடி பிரியர்கள் காலி பாட்டில்களை கொண்டு வந்து டாஸ்மாக் கடைகளில் கொடுத்து விலை குறைத்து மதுவாங்கி சென்றனர்.
இதற்கிடையே மதுபாட்டிகள் விலை உயர்த்தி விற்பனை செய்த விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதனால் டாஸ்மாக் கடை ஊழியர்கள் காலி மதுபாட்டிலை நாங்கள் ஏன் கூலி கொடுத்து லாரிகளில் ஏற்ற வேண்டும் என முரண்டு பிடித்து வருகின்றனர்.
இந்நிலையில், விருத்தாசலம் பகுதியில் மதுபாட்டில் சப்ளை செய்யவில்லை. இப்பகுதியில் செயல்பட்டுவந்த 5 டாஸ்மாக் கடைகளும், தனியார் 4 கடைகளும் சரக்கு சப்ளை இல்லாமல் நேற்று பகலில் மூடி இருந்தன.
இதே பிரச்னை காரணமாக இன்னும் சில இடங்களிலும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு கிடந்தன. இரவு லாரி ஒப்பந்ததாரரிடம் சமரசம் பேசி மதுபாட்டில் அனுப்பப்பட்டுள்ளதாக ஒரு அதிகாரி தெரிவித்தார்.