Politics
திமுகவின் போலி பிம்பம் உடைக்கப்படும்! லியோவாக மாறிய விஜய்
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேசியது குறித்து...
திமுகவின் போலி பிம்பம் உடைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேசியதாவது, "செய்கிற தவறுகளையே ஒழுங்காகவும் முறையாகவும் செய்திருக்கிறார்கள். இவர்கள் மீதான வழக்குகளில் உச்ச நீதிமன்றம்தான் பெயில் வழங்கியதாகக் கூறுகின்றனர். பெயில் கொடுத்ததால் விசாரிக்கக் கூடாது என உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் சொல்லவில்லையே.
2 துறைகளின் கோப்புகளுக்கு இப்படியென்றால், மற்ற துறைகளின் கோப்புகளைத் திறந்தால் எத்தனை பூதங்கள் கிளம்புமோ தெரியவில்லை.
தவறு செய்துவிட்டு மாட்டிக் கொள்பவர்கள் ஒரு ரகம், செய்த தவறுகளிலிருந்து எப்படியெல்லாம் தப்பிக்கலாம் என தயார் செய்துவிட்டு மாட்டிக் கொள்ளாமல் தவறு செய்பவர்கள் இன்னொரு ரகம். நம் தோழர்கள் (திமுக) இரண்டாவது ரகம்.
திமுக இருக்கும் இடங்களில்தான் தவறுகள் நடக்கும். தவறுகள் நடக்குமிடத்தில்தான் திமுக இருக்கும்.
நான் அல்லது அமைச்சர்கள் யாரும் ஊழல் என்று சொன்னால், ஆதாரங்களைக் கொடுக்கச் சொல்லி எதிர்க்கட்சியினர் உடனே எழுந்து விடுவர். ஆனால், இதுவரையில் ஊழலே செய்ததில்லை என சொன்னதில்லை. ஊழல் செய்தவர்கள்தான் ஆதாரம் கேட்பார்கள். ஊழலே செய்யாதவர்கள் அதனைக் கண்டுகொள்ள மாட்டார்கள்.
அரை நூற்றாண்டுக்கும் கீழே ஆழமாகச் சென்று, தோண்டியெடுத்து, மக்களை ஏமாற்றுகிற அந்த போலி பிம்பத்தையும் போலி பிராண்டையும் உடைக்கப்படும் என்று எச்சரிக்கையாக அல்லாமல் பணிவுடன் சொல்லிக் கொள்கிறேன்.
இந்த நாற்காலிக்காகவோ அதிகாரத்துக்காகவோ நான் இங்கு வரவில்லை. மக்களுக்கு உண்மையாக நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகவும், நன்றிக் கடன் செலுத்துவதற்காகவும் மட்டுமே இங்கு வந்துள்ளேன்" என்று தெரிவித்தார்.
DMK's fake image will be shattered, says CM Vijay
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.