Religion
அருப்புக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பாக ஊர்வலம் நடந்தது.
அருப்புக்கோட்டையில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடப்பது வழக்கம். நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி நடந்த நிலையில், நேற்று மாலை 4:00 மணிக்கு இந்து முன்னணி சார்பாக, பாலையம்பட்டி, இ.பி., காலனி, ராஜீவ் நகர், மணிநகரம், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 10 விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. மதுரை ரோடு, அண்ணாதுரை சிலை, மெயின் பஜார்,பந்தல்குடி ரோடு வழியாக சென்று பெரிய கண்மாயில் கரைக்கப்பட்டது.
ஊர்வலத்திற்கு மாவட்ட எஸ்.பி., கெளதம் கோயல் தலைமையில், டி.எஸ்.பி., விக்னேஷ் மற்றும் 422 போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.