Politics
கிராம சபைக் கூட்டங்களை வலுப்படுத்த முதல்வர் விஜய்க்கு கமல்ஹாசன் எம்பி கடிதம்!
தமிழகத்தில் கிராம சபைக் கூட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என மாநிலங்களவை எம்பி கமல்ஹாசன் முதல்வர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் வருகிற அக்டோபர் 2 அன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இந்த நிலையில், கிராம சபை கூட்டங்களை பயனுள்ளதாகவும், வலுப்படுத்தவும் மாற்ற நடிகரும், மாநிலங்களவை எம்பியுமான கமல்ஹாசன் முதல்வர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது சமூக ஊடகப் பதிவில், “கிராம சபைக் கூட்டங்களை, அடிமட்ட ஜனநாயகத்தின் அர்த்தமுள்ள அமைப்புகளாக வலுப்படுத்த பின்வரும் பரிந்துரைகளைத் தெரிவித்து, தமிழக முதல்வர் விஜய்க்கு நான் கடிதம் எழுதியுள்ளேன்.
காந்தியடிகளின் கிராம சுயராஜ்யம் என்கிற தொலைநோக்குப் பார்வை, கிராமங்கள் அதிகாரம் பெறுதல் மற்றும் ஜனநாயகத்தில் மக்களின் பங்கேற்பு ஆகியவற்றின் அடிப்படையிலேயே அமைந்திருந்தது. கிராம நிர்வாகத்தில் இந்தியாவிலேயே முன்மாதிரி மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்வதே, காந்தியின் உன்னதமான கொள்கைகளுக்கு செலுத்தும் மரியாதையாக அமையும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனுடன், கமல்ஹாசன் தான் எழுதிய கடிதத்தையும் இணைத்துள்ளார்.
Rajya Sabha MP Kamal Haasan has written a letter to Chief Minister Vijay, urging that Gram Sabha meetings be strengthened in Tamil Nadu.
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.