Crime, law and justice
இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!

நவோதயா பள்ளிகள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அறிவுரை...
நவோதயா பள்ளிகள் தொடங்குவதற்கு இடங்களை தேர்வு செய்வது தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை திரும்பப் பெறக் கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் ஏ.ஜி. மசிஹ் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய நீதிபதிகள், “தமிழ்நாடு அரசு தங்களின் மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு மண்ணில் ஹிந்தி கற்பிக்கப்படவே கூடாது என்ற நிலைப்பாடு இருக்கக்கூடாது.
உங்கள் மாநிலத்தில் நீங்கள் செய்துவரும் நல்ல விஷயங்களுடன் கூடுதலாக ஒன்றைச் சேர்த்துக்கொள்வது உங்கள் தரத்தைக் குறைத்துவிடாது. தில்லியிலிருந்து வரும் ஒரு விஷயம் சென்னையின் தரத்தைக் குறைத்துவிடாது. சென்னை மக்கள் தில்லியை அந்நியப்படுத்தக்கூடாது. அதேபோல், தில்லியும் சென்னையை அந்நியப்படுத்தக்கூடாது.
ஹிந்திதான் பிரச்னை என்றால் மத்திய - மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தலாம். எங்கள் முந்தைய உத்தரவை அமல்படுத்துங்கள். நிலத்தை கையகப்படுத்துமாறு நாங்கள் உங்களிடம் கேட்கவில்லை. இடத்தைக் கண்டறியுமாறு மட்டுமே கேட்கிறோம்.
நான் ஒரு கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று நீங்கள் கூற முடியாது. இன்று கல்வித் துறை என்றால், நாளை வேறொன்றாக இருக்கலாம். உங்கள் மனதிலிருக்கும் இந்த இறுக்கமான நிலையை நீங்கள் தளர்த்திக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில் 15.12.2025 தேதியிட்ட உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை மூன்று மாதத்துக்குள் செயல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
Education today might be different tomorrow! Supreme Court advises Tamil Nadu government to change its mindset.
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.