Religion
திருப்புத்துாரில் விநாயகர் சிலை ஊர்வலம்
திருப்புத்துார்,செப்.17- திருப்புத்துாரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் முக்கிய
திருப்புத்துாரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் முக்கிய வீதிகளின் வழியாக கொண்டு செல்லப்பட்டு குளத்தில் கரைக்கப்பட்டது.
திருப்புத்துாரில் 25 இடங்களில் விநாயகர் சிலைகள் செப்.,13ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து அப்பகுதியினரால் வழிபாடு நடந்தது.மறுநாள் குழந்தைகள் பங்கேற்ற விளையாட்டுப்போட்டிகள் நடந்தன. விநாயகர் சதுர்த்தியன்று சொற்பொழிவு நடந்தது. மூன்றாம் நாள் பல பகுதிகளிலிருந்தும் வாகனங்களில் விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டு, சீரணி அரங்க தேரோடும் வீதியில் அணி வகுத்தன.
ஹிந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் அக்னிபாலா, ஆ.பி.சீ.அ.கல்லூரி துணைத்தலைவர் ஆறு.நா.ராமேஸ்வரன், ஹிந்து பாதுகாப்பு இயக்க மாநிலதுணைத் தலைவர் கரு.நாகசுந்தரம், எஸ்.எஸ்.ஆர்.கல்வி அறக்கட்டளை சேது சிவராமன், பா.ஜ.,தெற்கு ஒன்றியத் தலைவர் தங்கபாண்டியன்,நகர் தலைவர் பாலகிருஷ்ணமூர்த்தி பேசினர். பேரூராட்சித் தலைவர் கோகிலாராணி நாராயணன் ஊர்வலத்தைத் துவக்கி வைத்தார்.
புதுப்பட்டி சங்கிலியான் குளத்திற்கு ஊர்வலம் வந்தது. அங்கு அனைத்து விநாயகர் சிலைகளுக்கும் தீபாராதனை நடந்து போலீஸ் பாதுகாப்புடன் குளத்தில் சிலைகள் கரைக்கப்பட்டது.