Sport
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: பள்ளி மாணவர்கள் ஆர்வம்

தேனி: தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் துவங்கிய முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நேற்று துவங்கின. கலெக்டர் வைத்திநாதன் துவக்கி வைத்தார். பெரியகுளம் எம்.எல்.ஏ., சபரிஐங்கரன் முன்னிலை வகித்தார். சி.இ.ஓ., முருகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவக்குமார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குபேந்திரன் பங்கேற்றனர். ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது, விளையாட்டு வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
ஹாக்கி, நீச்சல், ஹேண்ட்பால், கோ கோ, வாலிபால், கூடைப்பந்து போட்டியும், மாணவிகளுக்கான கால்பந்து, கபடி உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. போட்டிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இன்று கல்லுாரி மாணவர்களுக்கான போட்டிகள் துவங்குகிறது.
மாணவர்கள் அவதி மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு போதிய பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் 2கி.மீ., துாரம் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டது. போட்டி முடிந்தவர்கள் மதியம் வெயிலில் நடந்து சென்று அவதியடைந்தனர். போட்டிகள் நடைபெறும் பகுதியில் உணவு, திண்பண்ட கடைகள் இல்லாதததால் நீண்ட துாரம் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டது. விளையாட்டு அரங்கம் பகுதியில் உணவுகள், டீ, காபி விற்பனை செய்யவும், தரமான பொருட்கள் விற்பனை செய்வதை உறுதி செய்யவும் உணவுப்பாதுகாப்புத்துறையினர், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரினர்.