Politics
மிசா கொடுமையை விஜய் அரை மணி நேரம் தாங்குவாரா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி

சட்டசபையில் பேசிய, முதல்வர் விஜயின் உடல்மொழி, பொறுப்பு வாய்ந்த முதல்வருக்கு பொருத்தமானதாக இல்லை. ஊழல் குற்றச்சாட்டு இருந்தால் சட்டசபையில், கூறுவதால் என்ன பயன்? வழக்கு போடுங்கள். விசாரணை நடத்தி தண்டனை கொடுங்கள். அமலாக்கத்துறை வழக்கு போட்டால் உண்மையாகி விடுமா?
அவசர நிலை எனப்படும் 'மிசா' காலம், நாட்டின் துயரமான, சர்வாதிகார ஆட்சி நடந்த காலம். தமிழக சிறைகளில், பல தலைவர்கள் கடும் தாக்குதலுக்கு உள்ளானார்கள்; பலர் உயிரிழந்தனர். அந்த தாக்குதலை நியாயப்படுத்துவதும், தாக்குதலுக்கு உள்ளானவர்களை கொச்சைப்படுத்தி முதல்வர் பேசியதும் கடும் கண்டனத்திற்குரியது. மிசா காலத்து கொடுமையை முதல்வர் விஜய் சந்தித்து இருந்தால், அரை மணி நேரம் தாங்கியிருப்பாரா?