Politics
ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார் முதல்வர் விஜய்; சொல்கிறார் உதயநிதி

சென்னை: 'தமிழகத்தில் திமுக ஆட்சி நடந்து வருவதாக நினைப்பில் எங்கள் மீது அடுக்கடுக்கான ஆதாரமில்லாத, பொய்யான குற்றச்சாட்டுகளை முதல்வர் விஜய் சுமத்தியுள்ளார்,' என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டசபையில் பேச அனுமதிக்கப்படாததை கண்டித்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். அதன்பிறகு செய்தியாளர்களிடம் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசியதாவது; கடந்த வியாழக்கிழமை அன்று காவல்துறை மீதான விவாதத்தின் போது, எதிர்க்கட்சிகளின் சார்பாக பேசிய போது, பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருந்தேன். தவெகவின் 116 நாள் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்கெட்டு போயிருக்கிறது என்று மிகத் தெளிவாக விளக்கமாக, ஆதாரங்களுடன் பேசியிருந்தேன்.
தொடர்ந்து, முதல்வர் பொய்யான குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக முன்வைத்தார். எந்தவிதமான குற்றச்சாட்டுகளுக்கும் பதில் சொல்வதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டது. நாங்கள் மீண்டும் எங்களுக்கு வாய்ப்பு கொடுக்குமாறு கேட்டோம். முதலில் ஒப்புக்கொண்ட சபாநாயகர், பிறகு வாய்ப்பை மறுத்து விட்டார். எங்களின் எதிர்ப்பை தெரிவிப்பதற்காக, முதல்வரின் பேச்சை முழுமையாக கேட்டு விட்டு, வெளிநடப்பு செய்து விட்டோம்.
அவங்க (தவெக) கட்சிக்காரர்களே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளார்கள். சென்னையில் பட்டப்பகலில் இரு கொலை நடந்துள்ளது. அதைப் பேச வாய்ப்பு கேட்டேன். அதற்கும் வாய்ப்பு கொடுக்கவில்லை. இதற்கு எல்லாம் பதில் சொல்லாமல், 1970க்கு போய் விட்டார்.
தகுதி இருக்கா?
3 கோப்புகளை ஓபன் பண்ண சொன்னாங்க. அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகளை மட்டும் தான் படித்து காட்டுகிறார். திமுக தலைவர்களும், எம்எல்ஏக்களும், எம்பிக்களும் யாரும் ஊழல் செய்ததாக தண்டிக்கப்படவில்லை. முதல்வர் மீதே வருமான வரித்துறை வழக்கு இருக்கிறது. பொதுப்பணித்துறை மீது அமலாக்கத்துறை வழக்கு நடந்து கொண்டே இருக்கிறது.
அவர்களின் கட்சியில் சேர்த்திருக்கிறார்களே, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்கள், கு.ப.கிருஷ்ணன் ஆகியோரை வைத்துக் கொண்டு, எங்களைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது. பெட்டி பெட்டியாக பணத்துடன் வந்து, ஆட்சியமைக்க ஆதரவு கேட்டதாக நேற்று முஸ்லிம் லீக் எம்எல்ஏ ஓபனாக சொல்லியுள்ளார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி செய்தியாளர் சந்திப்பு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு