Sport
மாவட்ட விளையாட்டு போட்டி முதல் நாளில் 3,390 பேர் பங்கேற்பு

கரூர்:கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி தொடக்க விழா நேற்று நடந்தது. கலெக்டர் முத்துக்குமரன் தொடங்கி வைத்தார்.
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி வரும், 27 வரை பல்வேறு பிரிவுகளில் நடக்கிறது. இதில், 11,617 பள்ளி மாணவ, மாணவியர், 12,808 கல்லுாரி மாணவ, மாணவியர், 1,770
மாற்றுத்திறனாளிகள், 4,491 அரசு அலுவலர்கள், 19,345 பொதுமக்கள் என மொத்தம், 50,023 பேர் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். கரூர் மாவட்ட விளையாட்டு மைதானம், கரூர் தளவாபளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரி, புலியூர் செட்டிநாடு பொறியியல் கல்லுாரி, வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பரணி பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் கரூர் மாநகராட்சி நீச்சல் குளத்தில் போட்டிகள் நடக்கின்றன.
நேற்று நடந்த போட்டிகளில், 3,390 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு, 42.30 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது. மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுவோர், மாநில அளவிலான போட்டிகளில்
இவ்வாறு, அவர் கூறினார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனசேகரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல் உள்பட பலர் பங்கேற்றனர்.



/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

