Religion
விநாயகர் சிலைகள் விற்பனை ஜோர்
ராமநாதபுரம்: நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை (செப்.14) கொண்டாடப்படவுள்ளது.
அதற்காக கடந்த ஒரு மாதமாக சிலை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. அரசின் நடைமுறை வழிகாட்டுதல்படி பேப்பர்கூல், கிழங்குமாவு பசை, எளிதில் நீரில் கரையும் தன்மை கொண்ட வர்ணம் ஆகியவற்றை பயன்படுத்தி ஒரு அடி முதல் 15 அடி வரை விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டன. விநாயகர் அமர்ந்த நிலையில், சிங்க விநாயகர், யானை விநாயகர், ஐந்து முக விநாயகர், காளிங்கராயர் விநாயகர், சித்திபுத்தி விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன. சிறிய அளவிலான சிலை ரூ.50 முதல் விற்பனையாகிறது.