Religion
மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: 27 ஓதுவார்கள் மதுரைக்கு தற்காலிக பணியிடமாற்றம்!

மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு நாளை நடைபெறுகிறது. தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரி நடந்த போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நாளை குடமுழுக்கு நடைபெறும் நிலையில், தமிழ் ஓதுவார்கள், பாராயணம் பாடி வருகின்றனர்.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்தக் கோரிக்கை எழுந்து வரும் நிலையில் பல்வேறு கோயில்களில் பணியாற்றி வரும் 27 ஓதுவார்கள் மதுரைக்கு தற்காலிக பணியிடமாற்றம் செய்யப்பட்டு, பாராயாணம் பாடி வருகின்றனர். இந்நிலையில் மதுரையில் பேட்டியளித்த மீனாட்சியம்மன் கோயில் அறங்காவலர் குழுத் தலைவரான முன்னாள் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தாயார் ருக்மணி
குடமுழுக்கில் அரசியல் குறிக்கீடு உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இதனிடையே, தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரி, சென்னை இந்து அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்று வந்த உள்ளிருப்பு போராட்டம் திரும்பப்பெறப்பட்டுள்ளது.
தமிழில் பாராயணம் பாடப்பட்டு வருவதாக இந்து சமய நிலையத்துறை ஆணையர் அளித்த உறுதிமொழியை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டதாக இயக்குநர் கவுதமன் தெரிவித்துள்ளார்.
