Politics
சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அளித்த பதிலுரையின் டாப் 10 மொமண்ட்ஸ்
சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அளித்த பதிலுரை அரசியல் அரங்கில் கவனம் பெற்றுள்ளது. மிசா வழக்கு முதல் Party Fund, சர்க்காரியா கமிஷன், கரூர் விவகாரம் என பல்வேறு விவகாரங்களை சுட்டிக்காட்டி திமுகவை கடுமையாக விமர்சித்து தனது கருத்துகளை முன்வைத்தார்.
கண்ணதாசன் சொன்ன வரியை சுட்டிக்காட்டி திமுகவை விமர்சித்த விஜய், “பேசி பழகிய பொய்.. வாங்கி பழகிய கை.. போட்டு பழகிய பை.. இது தான் தி.மு.க” எனக் கூறினார்.
மிசா வழக்கு குறித்து பேசிய அவர், “மிசாவை பார்த்தவர்கள் என்று சொல்கிறார்கள்; மிசா பற்றிய வரலாறு எல்லோருக்கும் தெரியும்” எனத் தெரிவித்தார். இதன் மூலம் மிசா காலகட்டம் தொடர்பான அரசியல் விவாதத்தையும் அவர் எழுப்பினார்.
Party Fund குறித்து பேசிய விஜய், தான் கூறிய கருத்துகளுக்கு ஆதாரம் இருப்பதாக தெரிவித்தார். “Party Fund என சொன்னதற்கான ஆதாரம் உள்ளது” என அவர் கூறிய நிலையில், இந்த விவகாரம் சட்டப்பேரவையில் முக்கிய விவாதமாக மாறியது.
திமுகவை விமர்சித்த விஜய், “What a Great Achievement.. ‘DisHonest Intention’ அது தான் திமுக” என கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும், “செய்யும் தவறை ஒழுங்காக, முறையாக, சரியாக செய்துள்ள தி.மு.க” என்றும் அவர் விமர்சித்தார்.
அரசுத் துறைகளின் கோப்புகள் தொடர்பாக பேசிய விஜய், “2 துறை ஃபைலை ஓபன் செய்ததற்கே இப்படியா?” என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, “மற்ற துறைகள் ஓபன் செய்தால் எத்தனை பூதங்கள் கிளம்புமோ?” எனவும் அவர் கூறினார்.
தான் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் கேட்கப்பட்டதை சுட்டிக்காட்டிய விஜய், “ஆதாரம் வேண்டும்.. ஆதாரம் வேண்டும்... என்றனர். போதுமா ஆதாரம்?” என கேள்வி எழுப்பினார்.
சர்க்காரியா கமிஷன் தொடர்பான விவகாரத்தையும் விஜய் தனது பேச்சில் சுட்டிக்காட்டினார். 7 முறை ரூ.29 லட்சம் லஞ்சம் வழங்கப்பட்டதாக சர்க்காரியா கமிஷன் கூறியிருப்பதாக குறிப்பிட்டு அவர் திமுகவை விமர்சித்தார்.
மேலும், “போலி பிம்பம்... போலி பிராண்ட் உடைக்கப்படும்” எனக் கூறிய விஜய், திமுகவின் அரசியல் பிம்பத்தை விமர்சித்ததுடன், அந்த பிம்பம் உடைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கரூர் விவகாரம் குறித்தும் பேசிய விஜய், “கரூர் கேங்... அதன் தலைவன் தான் யாருன்னு தெரிய நமக்கே இவ்வளவு ஆர்வமாக உள்ளது” எனக் கூறினார். இதன் மூலம் கரூர் தொடர்பான அரசியல் விவகாரத்தையும் அவர் தனது பதிலுரையில் முன்வைத்தார்.
Party Fund விவகாரத்தில் முக்கிய நபர்களாக மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஆகியோரின் பெயர்களையும் விஜய் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், மிசா வழக்கு முதல் Party Fund வரை பல்வேறு விவகாரங்களை முன்வைத்து விஜய் ஆற்றிய பதிலுரை சட்டப்பேரவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.