Politics
"போலி பிம்பம் உடைந்தது உண்மையாகிறது" - தவெக ஐடி விங் விமர்சனம்!

முதலமைச்சர் விஜய் கூறிய திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்திருந்த நிலையில் அதற்கு தவெக ஐடி விங் பதில் கொடுத்திருக்கிறது.
மிசா சட்டம் குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் கூறிய கருத்துகளுக்கு விளக்கம் அளித்த திமுக தலைவர் ஸ்டாலின், மிசாவில் கைதாகி சிறை சென்ற போது பல்வேறு இன்னல்களை அங்கு சந்தித்ததாக கூறினார். மக்களுக்காக போராடும் போராளிகள் இதுபோன்ற அடுக்குமுறைகளை கடந்துதான் வந்துள்ளதாகவும், யார் கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்ற முடியாது என்றும் முதலமைச்சர் விஜய்க்கு பதில் அளித்தார்.
அதே நேரம், சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு பிறகு தன்னை சந்தித்த முதலமைச்சர் விஜய், பரப்புரையில் வைத்த விமர்சனங்களுக்கு மன்னிப்பு கேட்டதாக கூறிய மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் விஜய் கண்ணியத்துடன் பேச வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் தவெக ஐடி விங் மு.க.ஸ்டாலினின் இந்தப் பதில் குறித்து பதிவு வெளியிட்டுள்ளது. அதில், "பல ஆண்டுகளாகக் கட்டமைக்கப்பட்ட “சிறை சென்ற தியாகி” என்ற போலி பிம்பம் உடைந்ததில் பதற்றம் பற்றிக்கொண்டதோ?
எதை உலகறியக் கூடாது என்று மஞ்சள் துண்டு தந்தை முதல் ஆபாசநதி மகன் வரை கட்டி அடைகாத்தார்களோ, அது அம்பலமானதில் அச்சம் அதிகமாகியிருக்கிறது. அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மட்டும் மூச்சுவிடவில்லை.
உண்மைக்கு விளம்பரங்களோ, விளக்கங்களோ தேவையில்லை. ஆனால் இங்கே shooting video வெளியாகிறது என்றால், போலி பிம்பம் உடைந்தது உண்மையாகிறது. பல cut-கள், உணர்வற்ற பேச்சு, மீண்டும் உண்மைக்கு மாறான ஒன்றை நம்ப வைக்க முயலும் படுதோல்வி முயற்சியாகவே தெரிகின்றன.
கட்டுமரக் கதைகளாலும் கட்டுக்கதைகளாலும் கட்டமைக்கப்பட்ட பொய்ப் பிம்பம், மெய்யைத் தாக்குப்பிடிக்காது என்பதை நிரூபித்திருக்கிறது இன்று வெளியான பொய் போராளியின் காணொளி." என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
