Politics
மிரட்டல்களை எதிர்கொண்டு தேசம் வலிமையுடன் எழுச்சி பெறும்; ஸ்ரீதர் வேம்பு திட்டவட்டம்

சென்னை: மிரட்டல்களை எதிர்கொண்டு தேசம் வலிமையுடன் எழுச்சி பெறும் என அமெரிக்காவின் 100 சதவீத வரி விதிக்கும் மசோதா குறித்து ஸோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உட்பட 5 நாடுகள் மீது 100% இறக்குமதி வரி விதிக்கும் மசோதா அமெரிக்க செனட் சபையில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மீது அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் நாளை இறுதி ஓட்டெடுப்பு நடக்கிறது. இந்நிலையில் ஸ்ரீதர் வேம்பு வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:
100% வரி விதிப்பு அச்சுறுத்தல் பிரிக்ஸ் கூட்டமைப்பின் நடவடிக்கை எவ்வளவு சரியானது என்பதை துல்லியமாகக் எடுதுரைக்கிறது. நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்திலேயே உலகளாவிய ஒழுங்குமுறை மாறிவருகிறது.
நாம் வலுவாகவும், உறுதியாகவும் இருக்க வேண்டிய தருணம் இது. எழும் சவால்கள் மற்றும் இன்னல்கள் அனைத்தும் கடந்து போகும். இத்தகைய மிரட்டல்களை எதிர்கொண்டு இந்தத் தேசம் இன்னும் வலிமையுடன் எழுச்சி பெறும். இவ்வாறு ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.