Sport
முதல்வர் கோப்பை போட்டிகள் துவக்கம்
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளை அமைச்சர் ஜெகதீஸ்வரி தலைமை வகித்து துவக்கி வைத்தார். இதில் கலெக்டர் சுகபுத்ரா முன்னிலை வகித்தார்.
இப்போட்டிகள் செப்.30 வரை நடக்கிறது. கடந்தாண்டு நடத்தப்பட்ட 38 போட்டிகளுடன் தற்போது வில் வித்தை, வுஷீ, துப்பாக்கி சுடுதல், யோகா, மல்லர்கம்பம், ஸ்பீடு ஸ்கேட்டிங், நீர் விளையாட்டுகளான கயாக்யிங், கேனோயிங் ஆகியவை சேர்க்கப்பட்டு 45 வகை விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது.
இந்நிலையில் இன்றைய பாட்மின்டன் போட்டிகளுக்கு பதிவு செய்தவர்களுக்கு சர்வர் பழுது காரணமாக குறுந்தகவல் வரவில்லை என பெற்றோர் தெரிவிக்கின்றனர். பதிவு செய்தவர்களுக்கான போட்டி விவர குறுந்தகவல்களை விரைந்து அனுப்ப பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.