Politics
டூரிங் டாக்கீஸ்!

காலம் நம் தோழன் முஸ்தபா!
ஒரே துறையில் உச்சத்தை தொட்ட இருவர், இரு வேறு துறைகளுக்குச் சென்று வெற்றிக் கொடி நாட்டிக்கொண்டிருப்பது வியப்பான விசயம். சினிமாவிலிருந்து அரசியலுக்குச் சென்ற விஜய். தமிழ்நாட்டின் முதல்வராகிவிட்டார். சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸில் இறங்கிய அஜித் புதிய அணி ஒன்றினை உருவாக்கி பல சாதனைகளைப் படைத்துவருகிறார். இந்நிலையில், தமிழக சட்ட மன்றத்தில் சென்னையில் புதிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் உருவாக்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்தார். இதற்கு நன்றி தெரிவித்து அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “"தமிழ்நாட்டில் பிரத்யேகமான மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தற்போது மோட்டார் ஸ்போர்ட்ஸில் ஈடுபட்டு வரும் ஒருவராக, முதலமைச்சர் விஜய்க்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'’என்றிருக்கிறார்.
டென் இயர்ஸ் கம்பேக்!
"மாலை நேரத்து மயக்கம்' படத்தில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் காணாமல் போன வாமிகா கபி பத்து வருடங்களுக்குப் பிறகு "டிசி'’ படம் மூலம் கம்பேக் கொடுத்தார். ஒரு படம் நாயகியின் பங்களிப்பால் வெற்றி பெற்றதும் அவரை அடுத்தடுத்து படங்களுக்கு புக் செய்வது தமிழ் சினிமாவிற்கு ஒன்றும் புதிதல்ல, அப்படித்தான் புக்காகி வருகிறார் வாமிகா கபி. இயக்குநர் துரை செந்தில்குமார் -விஷால் கூட்டணியில் உருவாகும் ஒரு படத்திலும், ஹெச்.வினோத் - சூர்யா கூட்டணியில் உருவாகும் ஒரு படத்திலும் கமிட்டாகியுள்ளார்.
தெலுங்கில் பாலிவுட் ஹீரோயின்!
தென்னிந்திய மொழிகளில் பாலிவுட் ஹீரோ யின்கள் நடிக்க விருப்பம் காட்டி வருகிறார்கள். தெலுங்கில் ஜான்வி கபூர் தொடர்ச்சியாக நடித்து வரும் நிலையில் அடுத்து பாலிவுட்டிலிருந்து ஆலியா பட் நடிக்க வருகிறார். ஏகப்பட்ட இயக்குநர்களிடம் கதை கேட்டு வந்தவர் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படம் ஒன்றில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். அதற் கடுத்து பிரசாந்த் நீல் இயக்கத்தில் படம் ஒன்றில் நடிப் பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
கால்ஷீட் பிரச்சனை!
"வாத்தி', "குபேரா' படங்களைத் தொடர்ந்து தெலுங்கில் நடிப்பதற்கு வாய்ப்புகள் தனுஷிற்கு குவிந்து வருகிறது. "இருமுடி' படத்தின் வெற்றியால் இயக்குநர் சிவ நிர்வாணாவின் கதையில் நடிக்கலாம் என தன் முடிவை மாற்றியிருக்கிறார். கால்ஷீட் பிரச்சனையை சரி செய்தால் அவருடைய படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓல்டு இஸ் கோல்ட்!
இன்ஸ்டாகிராமில் 1 லட்சம் பார்வை யாளர்களை தொட்டதற்காக எமோஷ்னலான வீடியோ வெளியிட்டுள்ளார் வையாபுரி. தான் ஏன் இன்ஸ்டாகிராமில் வந்தேன் என்பதற்கான விளக்கமாக அது உள்ளது. அதில் இயக்குநர் ஒருவரைப் பார்க்கப் போனபோது அவரு பழைய ஆள், பார்க்க விருப்பமில்லை என்று சொல்லிவிட்டாராம். அதனால் சங்கடத்திற்கு உள்ளானவர், இன்ஸ்டாகிராமில் இருந்தால் தான் டிரெண்டிங்கில் இருப்ப தாக நினைக்கிறார்கள் என்று ஆரம்பித்தேன். மக்கள் எனக்கு நல்ல ஆதரவு தந்திருக்கிறார் கள் என்று எமோஷனல் ஆகியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)