Religion
17 ஆண்டுகள் கழித்து இன்று குடமுழுக்கு; ஒளி வெள்ளத்தில் மீனாட்சி அம்மன் கோயில்!

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா இன்று (17-09-26) கோலகலமாக நடைபெறவுள்ளது. இந்த விழாவிற்கான திருப்பணிகளை கடந்த 1 மாத காலமாக மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில், இன்று காலை 7:40 மணி முதல் 8:10 மணி வரை மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்க விழா வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது.
அதில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் கோயில் தங்க விமானங்கள், ராஜகோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்க நடைபெறவுள்ளது. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை சிவாச்சாரியர்கள் கலசங்களில் எடுத்துச் சென்று கோபுரங்களில் ஊற்றுவர். 7:55 மணிக்கு மீனாட்சி அம்மன் சன்னதிக்கு குடமுழுக்க, 8:10 மணிக்கு சுந்தரேஸ்வரர் சுவாமி சன்னதிக்கு மஹா குடமுழுக்கு நடக்கிறது.
17 ஆண்டுகளுக்குப் பின் இக்கோயிலில் குடமுழுக்கு நடைபெறுவதால் அதனை காண பக்தர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். கடந்த 2009ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்ற நிலையில், 17 ஆண்டுகள் கழித்து இன்று நடைபெறுவதால் அதனை காண மாசி வீதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலென குவிந்துள்ளனர். இந்த விழாவையொட்டி 6,500 காவலர்கள் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
குடமுழுக்கு விழா நிறைவு பெற்றவுடன் காலை 10 மணி முதல் பொது தரிசனத்திற்கு கோயிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு அனுமதிக்கப்படுவர். மேற்கு கோபுரம் மற்றும் தெற்கு கோபுரம் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு தரிசனத்திற்கு பிறகு கிழக்கு கோபுரம் வழியாக வெளியே செல்லப்படுவர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)