Religion
விநாயகர் சிலை கவிழ்ந்து காயம் 1
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் டிராக்டரில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட விநாயகர் சிலை கவிழ்ந்து விழுந்ததில் ஒருவர் காயம் அடைந்தார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராமநாதபுரம் நகர் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 45 விநாயகர் சிலைகள் நொச்சி ஊருணியில் கரைக்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ராமநாதபுரம் ஓம்சக்தி நகர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பெரிய விநாயகர் சிலை டிராக்டரில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
ராமநாதபுரம் பாரதி நகர் 'டி' பிளாக் எம்.எல்.ஏ., அலுவலகம் அருகில் சென்ற போது விநாயகர் சிலை கவிழ்ந்து விழுந்தது. இதில் வாகனத்தில் இருந்த ஓம்சக்தி நகர் கார்த்திக் 35, காயம் அடைந்தார். அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.