Sport
கபடி சாம்பியன்ஷிப் போட்டி தேதி மாற்றம்
கோவை: மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் ஆண்கள், பெண்களுக்கான மாவட்ட சாம்பியன்ஷிப் போட்டி 19, 20ம் தேதிகளில் நேரு ஸ்டேடியம் எதிரே மாநகராட்சி மைதானத்தில் நடைபெறுவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், முதல்வர் கோப்பைக்கான கபடி போட்டிகள் இத்தேதிகளில் நடைபெற உள்ளன. இதனால் மாவட்ட கபடி சாம்பியஷிப் போட்டியை வரும் 26, 27ம் தேதிகளில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இப்போட்டியில் அணிகளின் தலைவர், செயலாளர் ஆகிய இருவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படும்.
இவர்கள், 2026–30ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் மாவட்ட பொது குழுவில் இடம்பெறுவர்.
புதிய நிர்வாகிகள் தேர்தலில் வாக்களிக்கவும், போட்டியிடவும் தகுதியானவர்கள் என, சங்கத்தின் செயலாளர் தண்டபாணி தெரிவித்துள்ளார்.