Sport
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் 10ம் தேதி துவக்கம்
கோவை: முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் 12–19 வயதுடைய பள்ளி மாணவர்கள், 17–25 வயதுடைய கல்லுாரி மாணவர்கள், 15–35 வயதுடைய பொதுப்பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
இந்தாண்டுக்கு, ஆக.6 முதல் 31ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மாநிலம் முழுவதும் 24.94 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.
மாவட்டம் 1.34 லட்சம் பேருடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. போட்டிகளானது வரும் 9 முதல் அக். 4 வரை நடத்தப்படும் என முன்பு அறிவிக்கப்பட்டது.
வரும் 17ல் பள்ளிகளில் காலாண்டு தேர்வு துவங்குகிறது. இதையடுத்து வரும் 10 முதல் 30ம் தேதி வரை டென்னிஸ், துப்பாக்கி சுடுதல் உட்பட 31 வகையான போட்டிகள் முன்கூட்டியே நடத்தி முடிக்கப்படும் என, எஸ்.டி.ஏ.டி., மண்டல முதுநிலை மேலாளர் அருணா தெரிவித்துள்ளார்.