Politics
முதல்வர் பேச்சை நின்றபடி கேட்ட தி.மு.க.,வினர் அமைச்சர் கிண்டல்
சென்னை: பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் சட்டசபையில் பேசியதாவது:
முதல்வர் விஜய் ஒரு மணி நேரம் பேசிய போது, உண்மையின் சத்தம் என்ன என்று உலகத்திற்கே தெரிந்தது. நாங்கள் கூட முதல்வர் பேச்சை, உட்கார்ந்து தான் கேட்டோம்; தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் நின்று கொண்டே மரியாதையாக கேட்டனர்.
இங்கே தரையில் வேகமாக உட்கார்ந்தனர்; ஆனால், எழுந்திருக்க முடியவில்லை. முதல்வர் தான் எழுந்து, கைகொடுத்து துாக்கி விட்டார். தரையில் அமர்ந்த தி.மு.க.,வை துாக்கி விட்ட த.வெ.க., என்பது போல், இந்த நிகழ்வு அமைந்தது.
இவ்வாறு அவர் பேசினார்.